RCB WIPL: ஒரு வெற்றி கூட இல்லை.. ஆனாலும் எலிமினேட்டருக்கு பெங்களூர் போகலாம்..! அது எப்படி?
மகளிர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அவர்களுக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற அணிகள் எல்லாம் வெற்றி மேல் வெற்றியை குவித்து வரும் நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மட்டும் தோல்வி மேல் தோல்வியை குவித்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூர் அணி நேற்று கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு எதிராக போட்டியிலும் 2 பந்துகள் மீதம் வைத்து தோல்வியை தழுவியது. 15 சீசன்களாக ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெங்களூர் அணி கைப்பற்றாத நிலையில், மகளிர் அணி அந்த ஏக்கத்தை தீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மகளிர் ஆர்.சி.பி.யோ இன்னும் ஒரு வெற்றிகூட பெறவில்லை என்பது ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 5 தோல்விகளை கண்ட ஆர்.சி.பி. அணிக்கு இன்னும் எலிமினேட்டர் செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது. அது எப்படி என்பதை கீழே காணலாம்.
- 3 போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்
லீக் போட்டிகளில் அடுத்து விளையாட அனைத்து போட்டிகளிலும் பெங்களூர் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு செல்வது பற்றி ஆர்.சி.பி. சிந்திக்வே முடியும்.
- மும்பை, டெல்லி வெற்றி:
ஆர்.சி.பி. அணி தனது அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அந்த அணி மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்பை பொறுத்தே அவர்களுக்கு எலிமினேட்டர் வாய்ப்பு உள்ளது. அதாவது, பலமான அணியான மும்பை மற்றும் டெல்லி அணிகள் தங்களது அடுத்த போட்டிகளில் அதாவது குஜராத் மற்றும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
பெங்களூர் அணி தன்னுடைய அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மும்பை மற்றம் டெல்லி அணிகள் தங்களுடைய அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும்.
- குஜராத்தை உத்தரபிரதேசம் வீழ்த்த வேண்டும்.
மேலே கூறிய இரண்டு விஷயங்கள் அரங்கேறினால் மட்டும் ஆர்.சி.பி. அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது. குஜராத் அணி உத்தரபிரதேச அணியை வீழ்த்த வேண்டும்.
மேலே கூறிய அனைத்து விஷயங்களும் அரங்கேறினால் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி மும்பை, டெல்லி அணிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும். இதனால், எலிமினேட்டர் வாய்ப்பில் பெங்களூர் அணி இடம்பிடிக்கும்.
மேலும் படிக்க: IND vs AUS WTC Final: 20 ஆண்டுகள் பிறகு இறுதிப்போட்டி.. மோதும் இந்தியா- ஆஸ்திரேலியா.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!
மேலும் படிக்க: RCB-W in WPL: பாக்கவே பாவமா இருக்கு.. இறுதிவரை போராடி 5வது தோல்வியை தழுவிய பெங்களூர்..! சோகத்தில் ஆர்.சி.பி. ரசிகர்கள்..!