Watch Video : ’வர்றவன் பொருளை எடுத்து அவனையே போட்றவந்தான் ரவுடி…’ : மைண்ட் கேம் ஆடிய அஸ்வின், மாஸ் காட்டிய ரஹானே!
த்ரில்லராக அமைந்த இந்த போட்டியில் தோனி தரிசனம் கண்ட ரசிகர்கள், அதற்கு முன் அஷ்வினின் மைண்ட் கேமையும், அவரது மைண்ட் கேமை அவருக்கே திருப்பி தந்த ரஹானேவையும் கண்டு ரசித்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில், எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இடையே சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முன்னாள் இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானேவுடன் மைண்ட் கேம் ஆடியது பலரையும் ஈர்த்தது.
அஷ்வின் - ரஹானே
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த வாரம் நடந்த போட்டிகள் அனைத்துமே கடைசி பந்தில் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக இருக்க, அந்த விதி மாறாமல் அதே போல சென்னை - ராஜஸ்தான் போட்டியும் அமைந்தது. த்ரில்லராக அமைந்த இந்த போட்டியில் தோனி தரிசனம் கண்ட ரசிகர்கள், அதற்கு முன் அஷ்வினின் மைண்ட் கேமையும், அவரது மைண்ட் கேமை அவருக்கே திருப்பி தந்த ரஹானேவையும் கண்டு ரசித்தனர்.
மைண்ட் கேம் ஆடிய அஸ்வின்
பொதுவாக மைண்ட் கேமிற்கு பெயர் போனவர் ரவிச்சந்திரன் அஸ்வின். மான்காட் செய்வது முதல் பந்துகளை போட வந்து போடாமல் திரும்பி செல்வது என, சில மைண்ட் கேம்களை ஆடுவது வழக்கம். தனது சொந்த மண்ணில், சென்னை அணியை எதிர்த்து ஆடும் அவர் சென்னை அணி வீரரும், பழைய இந்திய அணி சக வீரருமான ரஹானேவிடம் அதனை செய்ததுதான் நேற்றிரவு டாக் ஆஃப் த டவுன். பனிப்பொழிவு கூடும் என்பதால் ஸ்பின்னர்களை சீக்கிரமே முடிக்கும் முடிவில் இருந்த சஞ்சு சாம்சன் ஐந்தாவது ஓவரை ஜாம்பாவிற்கு கொடுக்க. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீச அஷ்வின் வந்தார். அவரது முதல் பந்தை கச்சிதமாக எதிர்கொண்ட ரஹானேவை வீழ்த்த தனது மைண்ட் கேம் யுக்தியைக் கொண்டு வந்தார்.
திருப்பிக்கொடுத்த ரஹானே
அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீச அஸ்வின் ஓடி வர, அதனை இறங்கி அடிக்க ரஹானே முன்னேறி வர, பந்தை வீசுவதை நிறுத்தி அஸ்வின் பின்னால் சென்றார். இதனை கண்டு கடுப்பான ரஹானே, மீண்டும் அஸ்வின் அந்த பந்தை வீச ஓடி வரும்போது ஸ்டம்பில் இருந்து விலகி மாஸ் செய்தார். கூடி இருந்த சென்னை அணி ரசிகர்கள் கூச்சலிட அந்த மொமெண்ட் அனைவரையும் பூரிக்க செய்தது. அதோடு முடியாத அவர்களது மைண்ட் கேம், அந்த ஓவர் முழுவதும் தொடர்ந்தது. அந்த பந்தை மீண்டும் வீசிய அஸ்வின் கேரம் பாலாக வீச, அதனை கணித்த ரஹானே அந்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அஸ்வினி மொத்தமாக வீழ்த்தினார்.
— CricDekho (@Hanji_CricDekho) April 12, 2023
வைரலான ஸ்வாரஸ்ய தருணம்
இந்த அற்புதமான தருணத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஸ்வாரஸ்யமான ஃபோர்தான் ஐபிஎல்-ஐ உலக அரங்கிற்கு எடுத்து செல்கிறதென மெச்சி வருகின்றனர். அஸ்வின் தனது நான்கு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கு முறை சாம்பியனான ராஜஸ்தானை 3 ரன் வித்தியாசத்தில் வென்றதில் அஸ்வினின் பங்கும் அதிகம். பேட்டிங் செய்யும்போது முக்கியமான கட்டத்தில் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அவரது ஆல்ரவுண்ட் செயல்பாடுகள் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.