IPL Record: ஐ.பி.எல்லில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்...டாப் 5 வீரர்கள் யார்? விவரம் இதோ!
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐ.பி.எல் தொடர்:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஏபி டி வில்லியர்ஸ்:
கடந்த 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர் ஏபி டி வில்லியர்ஸ். இதுவரை 129 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 12 சிக்ஸர்களை விளாசினார். அந்த வகையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.
கிறிஸ் கெய்ல்:
இந்த பட்டியலில் 4வது மற்றும் 3 வது இடத்தில் இருப்பவர் கிறிஸ் கெய்ல். அதன்படி, 2012 ஆம் ஆண்டில் டெல்லி அணிக்கு எதிராக 13 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக 12 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
பிரண்டன் மெக்கல்லம்:
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பிரண்டன் மெக்கல்லம். இதுவரை ஐ.பி.எல் தொடரில் 158 போட்டிகள் விளையாடியுள்ள இவர் ஒரு போட்டியில் 13 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அந்தவகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்க விட்டதன் மூலம் இந்த சாதனையை செய்தார்.
கிறிஸ் கெய்ல்:
கடந்த 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று 17 சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன்படி, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களை விளாசி 175 ரன்களை குவித்தார். இது தான் ஐ.பி.எல் தொடரில் தனி நபர் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. அதேபோல், ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரரர் என்ற சாதனையையும் தன்வசமே வைத்துள்ளார் கிறிஸ் கெய்ல் தான் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட வீரராகவும் இருக்கிறார். அதேபோல் ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் 357 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார்.
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?
மேலும் படிக்க: Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம் - ஆகாஷ் தீப் ஓபன் டாக்