மேலும் அறிய

GT vs PBKS LIVE SCORE :குஜராத்தை பழிக்குபழி வாங்கிய பஞ்சாப்..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

IPL GT vs PBKS : குஜராத் - பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
GT vs PBKS LIVE SCORE :குஜராத்தை பழிக்குபழி வாங்கிய பஞ்சாப்..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Background

ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 48வது ஆட்டத்தில் பலம் மிகுந்த குஜராத் அணியை பஞ்சாப் அணி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கு அறிமுக அணியாக குஜராத் அணி களமிறங்கினாலும் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து வருகிறது.

குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன்கில், சஹா நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அந்த அணியின் மிகப்பெரிய பலமாக டேவிட் மில்லர் தற்போது விளங்கி வருகிறார். இக்கட்டான போட்டிகளில் அதிரடியாகவும்,பொறுப்புடனும் ஆடி குஜராத்தை மீட்டெடுக்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒன் டவுன் வீரராகவும் பொறுப்புடன் ஆடுகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கியும் அணிக்கு தனது பேட்டிங்கில் பெரும்பங்கு வகிக்கிறார்.

டேவிட் மில்லரைப் போல அந்த அணியின் ராகுல் திவேதியாவும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஏற்கனவே மோதிய போட்டியில் கடைசி இரு பந்தில் இரு சிக்ஸர் அடித்து குஜராத்தை ராகுல் திவேதியா வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷீத்கான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குகிறார். இவர்களுடன் அபினவ் மனோகர் மிடில் ஆர்டரில் ஒத்துழைக்கிறார். முகமது ஷமி, பெர்குசன் இருவரும் வேகத்தில் பக்கபலமாக உள்ளனர்.

ஜானி பார்ஸ்டோ இன்னும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தமிழக வீரர் ஷாரூக்கானும் தனது வாய்ப்பை பிரகாசமாக பயன்படுத்திக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ரன் கிடைக்கும். பனுகா ராஜபக்சே அதிரடியை காட்ட வேண்டியது அவசியம். அதேபோல, ஓடீன் ஸ்மித் அதிரடியாக ஆடினால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் எகிறும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ்சர்மாவும் அதிரடியில் கலக்குவார் என்பதால் நிச்சயம் பஞ்சாப் நெருக்கடி அளிக்கும்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கு ரபாடா மிகப்பெரிய பலம் ஆவார். அவருக்கு வேத்தில் வைபவ் ஆரோரா, அர்ஷ்தீப்சிங் ஒத்துழைக்க வேண்டும். சுழலில் ராகுல் சஹார் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பார். கடந்த முறை குஜராத்திடம் அடைந்த தோல்விக்கு பஞ்சாப் அணி இந்த போட்டி மூலம் பழிக்கு பழி தீர்க்குமா? அல்லது குஜராத்தின் ஆதிக்கம் தொடருமா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  

9 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்து 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகள் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

23:09 PM (IST)  •  03 May 2022

குஜராத்தை பழிக்குபழி வாங்கிய பஞ்சாப்..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது.

22:58 PM (IST)  •  03 May 2022

5 ஓவர்களில் 27 ரன்கள் தேவை...! வெற்றியின் விளிம்பில் பஞ்சாப்..!

பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 117 ரன்களை எடுத்துள்ளது. இதனால், அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 

22:43 PM (IST)  •  03 May 2022

அதிரடி காட்டிய பனுகா அவுட்..! ஷிகர்தவானுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன்..!

பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி வந்த பனுகா ராஜபக்‌ஷே 28 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

22:38 PM (IST)  •  03 May 2022

அரைசதம் விளாசிய ஷிகர்தவான்..!

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவான் 38 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 

22:29 PM (IST)  •  03 May 2022

பஞ்சாப் 10 ஓவர்களில் 76 ரன்கள்..!

பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 43 ரன்களுடனும், பனுகா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget