Kohli vs Ganguly: இறக்கம் காட்டாத கோலி.. இறங்கி வராத கங்குலி.. விராட்டின் பாணியிலேயே பழிதீர்த்த ’தாதா’..!
கடந்த 2021ம் ஆண்டு டி20 உலக் கோப்பை தோல்விக்கு பிறகு சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே தகராறு தொடங்கியது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி மற்றும் கங்குலி இடையேயான சண்டை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிவுக்கு பிறகு சவுரவ் கங்குலி கோலியுடன் கைகுலுக்கவில்லை.
இதன்மூலம், இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சண்டை உண்மைதான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அன்றைய நாள் போட்டிக்கு பிறகும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சவுரவ் கங்குலியை அன் ஃபாலோ செய்தார். விராட் கோலியின் இந்த நடவடிக்கைக்கு சவுரவ் கங்குலியும் தனது பாணியில் அதிரடியாக பதிலை ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி விராட் கோலியை அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் ஃபாலோ செய்தவதை நிறுத்தியுள்ளார்.
என்னதான் பிரச்சினை..?
கடந்த 2021ம் ஆண்டு டி20 உலக் கோப்பை தோல்விக்கு பிறகு சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே தகராறு தொடங்கியது. டி20 உலககோப்பை தொடக்கத்தில், விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இதை ஏற்று கொள்ளாத அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி விராட் கோலி விலகுவதை பார்க்க விரும்பவில்லை எனவும், கேப்டனாக தொடருமாறு விராட்டிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், சிறிது காலம் கழித்து விராட் கோலியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிசிசிஐ இந்த நடவடிக்கைக்கு பிறகு விராட் கோலி, சவுரவ் கங்குலி தன்னிடம் கேப்டன் பதவியில் நீடிக்குமாறு கூறவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 2022 ம் ஆண்டு விராட் கோலி டெஸ்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து வைத்தார். இதற்கும் காரணம் சவுரவ் கங்குலி என கூறப்பட்டது.
இந்த நடவடிக்கையை எடுத்த பிறகு, விராட் கோலி சவுரவ் கங்குலியின் பெயரை குறிப்பிடாமல் பல முறை குத்தி காமித்தார். அப்போதிலிருந்து சவுரவ் கங்குலி தரப்பில் இருந்து இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.
சனிக்கிழமை போட்டியின்போது..
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின்போது டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. அப்போது கங்குலி டக்-அவுட்டில் சோகமாக அமர்ந்திருந்தது. கங்குலியை க்ராஸ் செய்த விராட் கோலி அவரை பார்த்துக்கொண்டே சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருந்தது.
இதற்கெல்லாம் மேல் கடைசியாக போட்டியை வென்ற ஆர்சிபி அணி வெளியேறும்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி கை குலுக்கிக் கொண்டே வந்தது. அந்த நேரத்தில் ரிக்கி பாண்டிங்கின் பின்னால் கங்குலி வந்தார். விராட் கோலியை பார்த்த ரிக்கி பாண்டிங் இரண்டு வார்த்தை கூடுதலாய பேச, இடையில் கிடைத்த 2 நொடியை பயன்படுத்தி கொண்ட கங்குலி,கோலிக்கு கை கொடுக்காமல் நழுவி சென்றார். இந்த வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.