(Source: ECI/ABP News/ABP Majha)
Shubman Gill: ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரே சதம்... ஒஹோன்னு குவிந்த சாதனைகள்... அப்படி என்ன செய்தார் சுப்மன் கில்!
சுப்மன் கில் அடித்த இந்த சதத்துடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தாண்டு 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர்.
சிக்ஸர் இல்லாமல் அதிவேக அரைசதம்:
அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஹா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாக, அதன்பிறகு கில்லுடன் சாய் சுதர்சன் கூட்டணி அமைத்தார். இருவரும் இணைந்து ஹைதராபாத் அணிக்கு எதிராக 147 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ‘47 ரன்கள் எடுத்திருந்தபோது சுதர்சன் வெளியேற, மறுபுறம் கில் ரன் வேட்டையில் இறங்கி 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால், இந்த அரைசதத்தின்போது ஒரு சிக்ஸர் கூட கில் அடிக்கவில்லை. ஐபிஎல் 2010 ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 63 ரன்கள் அடித்திருந்தார் ஒரு சிக்ஸர் கூட இல்லாமல். இதன்மூலம் சிக்ஸர் அடிக்காமல் அதிவேகமாக அரைசதம் அடித்த சச்சினின் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்.
ஒரே ஸ்டேடியத்தில் ஒரே ஆண்டில் 3 சதங்கள்:
இந்த ஆண்டு சுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சதமடித்துள்ளார். அதில், டெஸ்ட், டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட சதங்கள் இந்தாண்டு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அடிக்கப்பட்டவை.
That HUNDRED feeling 🤗
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH | @ShubmanGill pic.twitter.com/C9UyUBvHd1
ஐபிஎல் 2023 : சதமடித்த ஆறாவது வீரர்
ஹைதராபாத் அணிக்கு எதிராக 56 பந்துகளில் சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஐபில் 2023 தொடரில் ஒட்டுமொத்தமாக இது 6வது சதமாகும். இதற்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயர், ஹாரி புரூக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரப்சிம்ரன் சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் சதமடித்துள்ளனர்.
இந்தாண்டு ஒரு மைதானத்தில் அதிக ரன்கள்:
சுப்மன் கில் அடித்த இந்த சதத்துடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தாண்டு 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரில் ஒரு ஸ்டேடியத்தில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிக ரன்களாக இது பதிவானது. இரண்டாவது இடத்தில் டெவோன் கான்வே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 இன்னிங்ஸ்களில் 350 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரு சீசனில் 500 ரன்கள்:
தனது ஐபிஎல் வாழ்க்கையில் சுப்மன் கில் முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் 2020 இல் 440 ரன்களும், 2021 இல் 478 ரன்களும் மற்றும் 2022 இல் 483 ரன்களும் எடுத்தார், மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.