(Source: ECI/ABP News/ABP Majha)
Sakshi Malik Wish Dhoni: 'சில வீரர்களுக்காவது மரியாதை கிடைப்பதில் மகிழ்ச்சி' - தோனிக்கு வாழ்த்து கூறிய சாக்ஷிமாலிக்
குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களாவது உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
Sakshee Malikkh Wish Dhoni: இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். இவர் 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை அணிக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ்.தோனிக்கு சாக்ஷி மாலிக் வாழ்த்து:
இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எம்.எஸ். தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துக்கள். குறைந்த பட்சம் சில விளையாட்டு வீரர்களாவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations MS Dhoni ji and CSK. We are happy that at least some sportspersons are getting respect and love they deserve. For us, the fight for justice is still on 😊
— Sakshee Malikkh (@SakshiMalik) May 30, 2023
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாத காலமாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அதாவது, மே மாதம் 28ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷன் சரண் சிங் கலந்து கொண்டதால், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தடையை மீறி மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயற்சித்தனர்.
கைது:
அப்போது, காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் பேரணியை தொடர முயன்ற போது அவர்களை காவல்துறை சிறைபிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அப்பகுதி களேபரமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகினர்.
Dear Indians, while we all are elated with MSD’s IPL victory, let’s give a thought to the Indian champion athletes who have been on the street since 37 days. They have fought scorching heat and storms. Instead of arresting the accused, now an FIR has been registered against them.… pic.twitter.com/njR7jsoAse
— Rahul Tahiliani (@Rahultahiliani9) May 30, 2023
சென்னை அணியின் வெற்றி மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள சமூக செயல்பாட்டாளார், ராகுல் தஹிலியானி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள இந்தியர்களே, எம்எஸ்டியின் ஐபிஎல் வெற்றியால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், 37 நாட்களாக தெருவில் இருக்கும் இந்திய சாம்பியன் விளையாட்டு வீரர்களைப் பற்றி சிந்திப்போம். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் புயலையும் எதிர்த்துப் போராடினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, இப்போது அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.