Ruthuraj record: ஐபிஎல்லில் 1000 ரன்கள்... சச்சினின் ரெக்கார்டை சமன் செய்த ருதுராஜ்!
ஐபிஎல் தொடரில், 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டி சாதனைப் படைத்திருக்கிறார் ருதுராஜ். இது சச்சினின் ரெக்கார்டை சமன் செய்வதாகும்.
நேற்று திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் களமிறங்கியது. ஓப்பனிங் களமிறங்கிய கான்வே - ருதுராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது. 45 பந்துகளில் அரை சதம் கடந்த ருதுராஜ், ஐபிஎல்லில் 1000 ரன்கள் கடந்து அசத்தினார். 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டி சாதனைப் படைத்திருக்கிறார். இது சச்சினின் ரெக்கார்டை சமன் செய்வதாகும்.
1⃣0⃣0⃣0⃣ IPL runs for @Ruutu1331! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
Follow the match 👉 https://t.co/8IteJVPMqJ#TATAIPL | #SRHvCSK | @ChennaiIPL pic.twitter.com/IiWN7hRSR5
ஐபிஎல்லில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரனக்ளை கடந்த இந்திய பேட்டர்கள்
31: ருதுராஜ்*
31: சச்சின்
34: ரெய்னா
35: ரிஷப் பண்ட்
35: படிக்கல்
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ், சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 99 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜனின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருக்கிறார் அவர். இருப்பினும், 6 சிக்சர் இந்த சீசனில் இந்த இன்னிங்ஸில்தான் ருதுராஜ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்தாண்டு ஆரம்பம் முதல் தடுமாற்றம்தான். இதுவரை நடந்த 8 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் கனவு மங்கியது என்றே சொல்லலாம். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்ல இனி வரும் போட்டியில் ஒன்றில் கூட தோற்காமல் இருக்க வேண்டும். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெறுவதன் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்