மேலும் அறிய

RCB WIN : கடைசி பந்தில் கே.எஸ்.பரத் சிக்ஸ் : டெல்லியை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி

RCB WIN : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற பெங்களூர் – டெல்லி அணி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை டெல்லிக்கு அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 88 ரன்கள் குவித்தனர்.

தவான் 43 ரன்னிலும், ப்ரித்விஷா 48 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 10 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 10 ஓவர்களில் 90 ரன்கள் வரை எடுத்திருந்த டெல்லி 10 முதல் 15 ஓவர்கள் இடையில் போராடியது. கடைசி கட்டத்தில் ஹெட்மயர் சற்று அதிரடியாக ஆடி 22 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 29 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.

RCB WIN : கடைசி பந்தில் கே.எஸ்.பரத் சிக்ஸ் : டெல்லியை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி

பெங்களூர் அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல், ஹர்ஷல் படேல், கிறிஸ்டின் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. விராட்கோலியும், தேவ்தத் படிக்கல்லும் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், டெல்லியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நோர்ட்ஜே முதல் ஓவரிலே தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் கேப்டன் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் பெங்களூர் அணி அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, பெங்களூர் அணியின் வளரும் நட்சத்திரம் கே.எஸ்.பரத்- ஏபி டிவிலியர்சுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல ஆடினர். வழக்கமாக அதிரடியாக ஆடும் டிவிலியர்ஸ் இந்த போட்டியில் மிகவும் நிதானமாக ஆடினார். அவர் 26 பந்தில்  2 பவுண்டரி 1 சிக்ஸருடன்  26 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, பரத்துடன் கிளென் மேக்ஸ்வேலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர்.

RCB WIN : கடைசி பந்தில் கே.எஸ்.பரத் சிக்ஸ் : டெல்லியை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி

கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய பரத் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். பெங்களூர் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

RCB WIN : கடைசி பந்தில் கே.எஸ்.பரத் சிக்ஸ் : டெல்லியை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி

ஆவேஷ்கான் வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்தார். பின்னர், ஸ்ட்ரைக்கை பரத்திற்கு அளித்தார். கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை ஆவேஷ்கான் வைடாக வீசியதால் வெற்றிக்கு ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் புல்டாசாக வீசிய அந்த பந்தை கே.எஸ். பரத் சிக்ஸராக மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினார். இதனால், பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. விராட்கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வேல் ஆகியோருக்கு மத்தியில் புதிய நட்சத்திரமாக அந்த அணிக்கு கே.எஸ். பரத் கிடைத்துள்ளார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில்  3 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெங்களூர் அணி வரும் 11-ந் தேதி ஷார்ஜாவில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.

.

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget