RCB vs SRH, IPL 2023: சென்னையின் கனவு பலிக்குமா?.. பெங்களூரு - ஐதராபாத் அணிகளின் பிளேயிங் லெவன் இதோ
ஐபிஎல் தொடரில் பெங்களூரு - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெங்களூரு - ஐதராபாத் மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே- ஆஃப் சுற்று தொடங்க இன்னும் வெறும் 6 லீக் போட்டிகளே உள்ள சூழலில், இன்று நடைபெறும் தொடரின் 65வது லீக் போட்டியில், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சூழலில் இரு அணிகளும் தங்களது பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி ப்ரூக், ஹென்றி பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், மயங்க் தாகர், நிதிஷ் குமார் ரெட்டி
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
மயங்க் மார்கண்டே, நடராஜன், விஒவ்ராந்த் சர்மா, சன்விர் சிங், அகீல் ஹுசைன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, சபாஷ் அகமது, முகமது சிராஜ்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
தினேஷ் கார்த்திக், வைஷக் விஜய் குமார், ஹிமான்சு ஷர்மா, பிரபுதேசாய், கேதர் ஜாதவ்
பெங்களூரு அணிக்கு வாழ்வா? சாவா?:
நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தலா 6 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதனால், இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. பெங்களூரு அணியின் மும்மூர்த்திகளான டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மை தொடருகின்றனர்.
ஐதராபாத் அணி நிலவரம்:
ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், உள்ளூர் மைதானங்களில் விளையாட உள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும், ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் விளையாட முடியும் என்பதால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத்தின் கரங்கள்தான் ஓங்கியுள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது.