LSG vs RCB, IPL 2023: முதலிடமா?.. பழிவாங்கும் களமா?.. பெங்களூரு - லக்னோ பிளேயிங் லெவன்
ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெங்களூரு - லக்னோ மோதல்:
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 43வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் லக்னோ அணியும், நடப்பு தொடரில் ஏற்கனவே இவர்களிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி தடும் வகையில் பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, இரு அணிகலும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு அணி வீரர்கள்:
டூப்ளெசிஸ், கோலி, பிரபுதேசாய், லோம்ரோர், மேக்ஸ்வெல், ராவத், ஹேசல்வுட், ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, முகமது சிராஜ்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ஹர்ஷல் படேல், சோனு யாதவ், பிரேஹ்வெல், விஜய் குமார், சபாஷ் அகமது
லக்னோ அணி வீரர்கள்:
கே.எல். ராகுல், ஸ்டோய்னிஷ், யாஷ் தாக்கூர், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணால் பாண்ட்யா, மிஷ்ரா, நிக்கோலஸ் பூரான், கே. கவுதம், ரவி பிஷ்னாய், நவின் உல்-ஹக்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ஆயுஷ் பதோனி, டேனியல் சாம்ஸ், டி காக், மன்கட், ஆவேஷ் கான்
நேருக்கு நேர்:
- கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான லக்னோ அணியும். ஆர்.சி.பி. அணியும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் லக்னோ அணி 1 முறையும், ஆர்.சி.பி. அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பாண்டில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் லக்னோ அணி வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தனிநபர் அதிகபட்சமாக ரஜத் படிதார் 112 ரன்கள் விளாசியதே அதிகமாகும்.
- லக்னோ அணிக்காக கே.எல்.ராகுல் 79 ரன்கள் குவித்தது எல்.எஸ்.ஜி. சார்பில் தனிநபர் அதிகபட்சம் ஆகும்.
- இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டுப்ளிசிஸ் மொத்தமாக 175 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
புள்ளிப்பட்டியல் விவரம்:
புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும். அதேசமயம் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். ஆர்.சி.பி. அணியை காட்டிலும் லக்னோ அணி ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், லக்னோ அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் 6வது இடத்திலும் நீடிக்கிறது.