மேலும் அறிய

Ravichandran Ashwin: "CSK-வில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது!" மனம் திறந்து பேசிய அஸ்வின்: ஓய்வு முடிவின் பின்னணி என்ன?

தன்னுடைய ஓய்வு முடிவு தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமல்ல, அணியின் அடுத்தகட்ட முடிவுகளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுக்கப்பட்டதாக அஸ்வின் வலியுறுத்தினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இணைந்தது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், அந்தப் பயணம் கசப்பான அனுபவமாக முடிந்ததாக அஸ்வின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

மன அழுத்தமும், ஏமாற்றமும்:

"CSK-வில் நான் கழித்த அந்த சீசன் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. களத்தில் என்னால் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று என் மனது சொல்கிறது. ஆனால், குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டு, இந்த மன அழுத்தத்தைச் சுமக்க எனக்குத் திராணி இல்லை. அதனால் நானே விலகிக்கொண்டேன்" என்று அஸ்வின் தெரிவித்தார்.

மேலும், "அந்தக் காயங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை. அது எனக்கு மனதளவில் பெரும் வேதனையை அளித்தது. கிரிக்கெட் பயணத்தை சென்னையில் தொடங்கினேன், இப்போது என் சொந்த ஊரான சிஎஸ்கே அணியோடு அதை நிறைவு செய்வது எனக்கு திருப்தி அளிக்கிறது" என்றார்.

2025-இல் நடந்தது என்ன?

2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருந்த நிலையில், அஸ்வினுக்கு வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அணியில் தனது பங்கு என்ன என்பது குறித்து அவர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே, 2026 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருவது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு

அஸ்வினின் விலகல் குறித்த சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்: "நான் ஓய்வு பெற எடுத்த முடிவு, அணியின் சுமையைக் குறைத்தது. என்னை தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்திலிருந்து அவர்களை விடுவித்தேன். நான் விலகியதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 10 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது" என்றார்.

9.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஸ்வின், தனது விலகல் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளார். எம்.எஸ். தோனியின் நிழலில் பயணிக்கும் சிஎஸ்கே அணிக்கு, அஸ்வினின் இந்த விலகல் புதிய வீரர்களைத் திரட்டப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Embed widget