மேலும் அறிய

IPL Points Table: குஜராத், பஞ்சாப் கண்ட த்ரில் வெற்றி..! புள்ளிப்பட்டியலில் மாற்றமா? ஏமாற்றமா?

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அதன் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அதன் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 31 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

லக்னோ மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் போட்டியில் கே.எல்.ராகுல்  தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.  மற்றொரு லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, சாம் கர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள்  போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 6 4 2 8
லக்னோ 7 4 3 8
சென்னை 6 4 2 8
குஜராத் 6 4 2 8
பஞ்சாப் 7 4 3 8
பெங்களூரு 6 3 3 6
மும்பை  6 3 3 6
கொல்கத்தா 6 2 4 4
ஐதராபாத் 6 2 4 4
டெல்லி 6 1 5 2

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான், லக்னோ, சென்னை மற்றும் குஜராத் அணிகள் நடப்பு தொடரில் இதுவரை தலா 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன்,  ரன் ரேட் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளன.  முன் எப்போதும் இல்லாத அளவில் அணிகளுக்கு இடையே முதல் 4 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ரன் ரேட் முக்கிய பங்காற்றி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்குள் எந்த அணிகள் நுழையும் என்பதையும் இந்த முறை ரன் ரேட் தான் நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள் பஞ்சாப் அணியும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

மற்ற அணிகளின் நிலை:

பெங்களூரு, மும்பை மற்றும்  தலா 6 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே 6 மற்றும் 7வது இடத்தை வகிக்கின்றன.  கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 4 புள்ளிகளுடன், 8 மற்றும் 9வது இடங்களிலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டிகள்:

இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோத உள்ளது. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை உறுதி செய்யும்.  பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற முடியும். இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும். கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் 6வது இடம் வரையில் முன்னேறக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 Champion: ஈ சாலா கப் மீண்டும் நமதே! ஐபிஎல் மகுடத்தை மீண்டும் சூடியது ஆர்சிபி! கோலியாண்டவர் ருத்ரதாண்டவம்!
IPL 2026 Champion: ஈ சாலா கப் மீண்டும் நமதே! ஐபிஎல் மகுடத்தை மீண்டும் சூடியது ஆர்சிபி! கோலியாண்டவர் ருத்ரதாண்டவம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Embed widget