மேலும் அறிய

IPL Points Table: ”ஜெயிச்சும் பலன் இல்லையா..?” ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் சென்னை அணியின் நிலவரம் இதுதான்..!

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியாமல் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியாமல் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 6 4 2 8
லக்னோ 6 4 2 8
சென்னை 6 4 2 8
குஜராத் 5 3 2 8
பெங்களூரு 6 3 3 6
மும்பை 5 3 2 6
பஞ்சாப் 6 3 3 6
கொல்கத்தா 6 2 4 4
ஐதராபாத் 6 2 4 4
டெல்லி 6 1 5 2

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் மற்றும்  லக்னோ அணிகள் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன்,  ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்துள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணியும், இதுவரை 8 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், குஜராத் அணி 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. 

மற்ற அணிகளின் நிலை:

பெங்களூரு, மும்பை மற்றும்  பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே  5 முதல் 7வது இடத்தை வகிக்கின்றன.  கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 4 புள்ளிகளுடன், 8 மற்றும் 9வது இடங்களிலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டி:

இன்றைய முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியுடன் லக்னோ அணி மோத உள்ளது. இதில் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். குஜராத் அபார வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும். இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இரண்டில் எந்த ஒரு அணி வெற்றி பெற்றாலும், குறைந்தபட்சம் 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget