மேலும் அறிய

Points Table IPL 2023: பஞ்சாபை வீழ்த்திய குஜராத்..ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏறுமுகமா?

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேலும் 2 புள்ளிகளை சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேலும் 2 புள்ளிகளை சேர்த்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 18 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், அதற்குள் ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நேற்றைய போட்டி:

நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை தவான் தலைமையிலான பஞ்சாப் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 67 ரன்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி ஆகும்.  இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 4 3 1 6
லக்னோ 4 3 1 6
குஜராத் 4 3 1 6
கொல்கத்தா 3 2 1 4
சென்னை 4 2 2 4
பஞ்சாப் 4 2 2 4
பெங்களூரு 3 1 2 2
மும்பை 3 1 2 2
ஐதராபாத் 3 1 2 2
டெல்லி 4 0 4 0

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி, தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட அணிகள் தலா 6 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா அணி 3 போட்டிகளிலும், சென்னை அணி 4 போட்டிகளிலும் விளையாடி தலா இரண்டில் வெற்றி பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணியும் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு, மும்பை  மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 7 முதல் 9வது இடங்களை ஆக்கிரமித்துள்ளன. டெல்லி அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை கண்டு, முறையே கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 

இன்றைய போட்டி:

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராணா தலைமையிலான கொல்கத்தா மற்றும் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் அதை தொடர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget