மேலும் அறிய

PBKS vs RR 1st Innings Highlights: இறுதியில் போல்ட்டை பொளந்து கட்டிய ஷரூக் கான்; ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு..!

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த சாம் கரன் 31 பந்தில் 49 ரன்களும், ஷரூக் கான் 23 பந்துகளில் 41 ரனகள் சேர்த்து இருந்தார்.

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அழகான மைதானமான தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பஞ்சாப் அணியைப் பொறுத்தமட்டில் ப்ளேஆஃப்க்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் எனும் முனைப்போடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறாங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் மிகச் சிறப்பாக அமைய வில்லை. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக சதம் விளாசிய ப்ரப்சிம்ரன் இரண்டு ரன்கள் சேர்த்த நிலையில் போட்டியின் முதல் ஓவரை வீசிய போல்ட்டிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 50 ரன்களை எட்டியதும் 4வது விக்கெட்டை இழந்தது. 

அதன் பின்னர் கைகோர்த்த சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இதனால் பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மேலும், 39 பந்தில் இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் அதிரடியாக பவுண்டரிகளும் சிக்ஸரும் விளாசிய ஜிதேஷ் சர்மா 14வது ஓவரின் 4வது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

16 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் சாம் கரன் மற்றும் ஷாரூக் கான் இருந்தனர். இவர்கள் இருவரும் பஞ்சாப் அணியை மேற்கொண்டு விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக்கொள்வதுடன் சவாலான ஸ்கோரை எட்டவேண்டிய பொறுப்பு இருந்தது. இதனால் இருவரும் கவனமாக ஆடினர்.  இறுதியில் அதிரடி காட்டிய இவர்களால் பஞ்சாப் அணி கடைசி 4 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தனர்.  இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த சாம் கரன் 31 பந்தில் 49 ரன்களும், ஷரூக் கான் 23 பந்துகளில் 41 ரனகள் சேர்த்து இருந்தார். மிடில் ஓவரில் சிறப்பாக அடிய ஜிதேஷ் சர்மா 28 பந்தில் 44 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் அணி சார்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget