PBKS vs DC IPL 2023 Playing XI: இது தான் எங்களோட சிறந்த ப்ளேயிங் லெவன்.. டெல்லி - பஞ்சாப் அணியின் முழு விபரம் இதோ..!
PBKS vs DC IPL 2023 Playing XI : டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் யார் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
![PBKS vs DC IPL 2023 Playing XI: இது தான் எங்களோட சிறந்த ப்ளேயிங் லெவன்.. டெல்லி - பஞ்சாப் அணியின் முழு விபரம் இதோ..! PBKS vs DC IPL 2023 Playing XI Delhi Capitals vs Punjab Kings, 59th Match PBKS vs DC IPL 2023 Playing XI: இது தான் எங்களோட சிறந்த ப்ளேயிங் லெவன்.. டெல்லி - பஞ்சாப் அணியின் முழு விபரம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/669e69b4440035e058a96d17a952c50a1683986367401252_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
PBKS vs DC IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
பஞ்சாப் - டெல்லி மோதல்:
இந்த சூழலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள, 59வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடலஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ள டெல்லி அணிக்கு இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் தங்களை நல்ல நிலைக்கு முன்னேற்ற உதவும். ஆனால் பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்
டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
மணீஷ் பாண்டே, ரிபால் படேல், லலித் யாதவ், சேத்தன் சகாரியா, அபிஷேக் போரல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, மோஹித் ரதி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)