IPL 2025: இந்தியா-பாக் பதற்றம்! திட்டமிட்டப்படி தொடருமா ஐபிஎல்? பதற்றத்தில் வெளிநாட்டு வீரர்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டி தொடர் திட்டமிட்டப்படி தொடருமா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, பிளேஆஃப் ரேசுக்கான மோதலில் 6 அணிகள் போட்டிப்போட்டு வருஎஞ்சியுள்ள ஐபிஎல் போட்டி தொடர் திட்டமிட்டப்படி தொடருமா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளது. போட்டி இப்போது சாத்தியமான இடையூறுகளை எதிர்கொள்கிறது.
நேற்று(07.05.2025) இரவு மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ஜிடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள்:
பதற்றங்கள் மேலும் அதிகரித்தால், ஐபிஎல் சீசனின் எஞ்சிய பகுதிகள் தடையின்றி தொடர முடியுமா என்பது குறித்த ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. போட்டிகளில் உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் கமிட்டியினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஐபிஎல் அணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு வீரர்களும் இந்த மோதல்களால் பாதிக்கப்படலாம். இந்த சீசன் மே 25 ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் பாதுகாப்பு கவலைகள் தீவிரமடைந்தால் வீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் அல்லது லாஜிஸ்டிக்ஸ் சம்பந்தப்பட்ட சவால்கள் ஏற்படக்கூடும். இப்போதைக்கு, போட்டிகள் அட்டவணைப்படி நடந்து வருகின்றன, ஆனால் திட்டமிட்டப்படி நடக்குமா என்னும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.
சிந்தூர் ஆப்ரேஷனை பாராட்டிய கிரிக்கெட் வீரர்கள்:
"ஆபரேஷன் சிந்தூர்" வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் இந்திய ராணுவத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
Dharmo Rakshati Rakshata
— Virrender Sehwag (@virendersehwag) May 7, 2025
Jai Hind ki Sena 🙏🏼#OperationSindoor
காஷ்மீரில் நடந்த துயரமான தாக்குதலிலிருந்து தேசம் இன்னும் மீளவில்லை - 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகக் கடுமையான சம்பவமாகக் கருதப்படுகிறது.
Varun Chakravarthy's Instagram story for Operation Sindoor. 🇮🇳 pic.twitter.com/vu1ewQrwEO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 7, 2025
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து இந்தியா ஒரு தீர்க்கமான எதிர் தாக்குதலை நடத்தியது.
Together we stand. Jai Hind 🫡 🇮🇳 pic.twitter.com/sZZhBm9O0L
— Aakash Chopra (@cricketaakash) May 6, 2025





















