MS Dhoni Speech: “கேப்டன்சி பொறுப்பு உங்கள் ஆட்டத்தை பாதிக்கலாம்...” - வெற்றிக்குப் பின் பேசிய தோனி
இனி வரும் போட்டிகளின் சென்னை அணி கண்டிப்பாக வெற்றிப்பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ன என்பது தெரிய வரும்.
நேற்று திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் களமிறங்கியது. ஓப்பனர் ருதுராஜ் 99 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிய கான்வே, 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது சென்னை அணி.
கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியை வென்றது
That's that from Match 46 of #TATAIPL.@ChennaiIPL win by 13 runs against #SRH.
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
Scorecard - https://t.co/8IteJVPMqJ #SRHvCSK #TATAIPL pic.twitter.com/TuCa1F2mKs
கேப்டனாக திரும்ப களமிறங்கி இருக்கும் தோனி வெற்றியுடன் இந்த ஐபிஎல்லின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். இனி வரும் போட்டிகளின் சென்னை அணி கண்டிப்பாக வெற்றிப்பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ன என்பது தெரிய வரும்.
போட்டி முடிந்தபின் பேசிய கேப்டன் தோனி, “ஜடேஜா கேப்டன்சி பொறுப்பை ஏற்றபோது முதல் இரண்டு போட்டிகளை கவனித்து வழிநடத்தினேன். அதற்கு அடுத்து நடந்த போட்டிகளில் அவரே முடிவுகளை எடுத்தார். கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருக்கும். இந்த பொறுப்புகள் ஒரு வீரராக உங்களது ஆட்டத்தை பாதிக்கலாம். கேப்டன்சி பொறுப்பு ஜடேஜாவின் ஆட்டத்தை பாதித்திருக்கிறது என நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்