Watch Video: எப்போதுமே நீங்கதான் தல கேப்டன்!! உருகி பேசிய ரசிகர்!! சைகையால் பதில் சொன்ன தோனி!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தோனி என்கிற நபர் மட்டுமே.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2022 ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகள் களமிறங்க உள்ளன. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காதவகையில் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். இதையடுத்து தோனி ரசிகர்கள் ஒரு தரப்பில் இது நியாயம் இல்லை என்றும், ஒரு சிலர் மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
THALA @MSDhoni,
— CSK Fans Army™ 🦁 (@CSKFansArmy) March 26, 2022
You will always be our Captain 🥺💛
VC : @nabeel_vp#WhistlePodu | #IPL2022 pic.twitter.com/R4mYqqv4xJ
இந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இரவு 7 மணிக்கு மோத இருக்கின்றனர். இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொண்டுவிட்டு ஓய்வெடுக்க ஹோட்டல் அறைக்கு திரும்பினார். அப்பொழுது அங்கிருந்த தோனி ரசிகர் ஒருவர், தோனி நடந்து வரும்போது "தல நீங்கதான் எங்களுக்கு எப்பவும் கேப்டன் என்று கத்தினார். இதைகேட்ட தோனி பெரிதாக அலட்டிகொள்ளாமல் சிம்பிளாக கையை மட்டுமே தூக்கிக்காட்டி விட்டு சென்றுவிட்டார். தற்போது இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்கள் இணையதளத்தில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தோனி என்கிற நபர் மட்டுமே. கடந்த 2008ம் ஆண்டு அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்