MI vs RCB, IPL 2023 Live: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களுரூ அணி வெற்றி..!
IPL 2023, Match 5, MI vs RCB: பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு - மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இவ்விரு அணிகள் தொடர்பான புள்ளி விவரங்களை நாம் இங்கு காணலாம்.
நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை -குஜராத் அணிகளும், நேற்றைய ஆட்டத்தில் லக்னோ - டெல்லி,பஞ்சாப் - கொல்கத்தா அணிகளும் மோதியது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை, ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
நேருக்கு - நேர்
பெங்களூரு - மும்பை அணிகள் இதுவரை 30 முறை மோதியுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறது. இதில் 17 முறை மும்பையும், 13 முறை பெங்களூரு அணியும் ஜெயித்துள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியில் கூட மும்பை அணியை பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோராக 235 ரன்களும், குறைந்தப்பட்ச ரன்னாக 122 ரன்களையும் பதிவு செய்துள்ளது. இதேபோல் மும்பை அணி அதிகப்பட்சமாக 213 ஆகவும், குறைந்தப்பட்சம் 111 ரன்களையும் ஸ்கோர்களாக எடுத்துள்ளது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும் மோதுவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடந்த 10 ஆட்டங்களில் மும்பை 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேசமயம் இவ்விரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைப் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது.
மைதானத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணியான பெங்களூரு அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.அதேசமயம் மும்பை அணி விளையாடிய 13 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இரு அணி வீரர்களின் விவரம் (கணிப்பு):
பெங்களூரு அணி: பாப் டூ பிளிசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அஹமது, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ்
மும்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ரமன்தீப் சிங், ஜோப்ரா ஆர்சர், ஹிருத்திக் ஷோக்கீன், சந்தீப் வாரியர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா
பெங்களூரு அணி வெற்றி..!
16.2 ஓவர்களில் பெங்களூரு அணி 172 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
MI vs RCB Live Score: டூ பிளஸ்சிஸ் விக்கெட்..!
சிறப்பாக ஆடிவந்த டூபிளஸ்சிஸ் 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
MI vs RCB Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!
14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்துள்ளது.
MI vs RCB Live Score: விராட் கோலி அரைசதம்..!
விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். 12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 113 ரன்கள் சேர்த்துள்ளது.
MI vs RCB Live Score: 11 ஓவர்கள் முடிவில்..!
அதிரடி காட்டும் கோலி டூ பிளிசிஸ் ஜோடி ; 11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 108 ரன்கள் குவிப்பு.