மேலும் அறிய

MI vs PBKS, IPL 2023: பழிவாங்குமா மும்பை?.. பஞ்சாபிற்கு எதிரான பிளேயிங் லெவன் இதோ..!

ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் ப்ஞ்சாப் அணிகளுக்கு இடையேயான, போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐபிஎல் சீசன்:

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 45 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ சினிமா செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும் கண்டுகளிக்கலாம்.  இதனிடையே, இரு அணிகள் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மும்பை பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வல், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

சூர்யகுமார் யாதவ், ஸ்டப்ஸ், ப்ரேவிஸ், வினோத், ரமன்தீப் சிங்

பஞ்சாப் பிளேயிங் லெவன்:

ஷிகர் தவான் (கேப்டன்), ப்ரப்சிம்ரன் சிங்,  லியாம் லிவிங்ஸ்டன், மேத்யூ ஷார்ட், சாம் கரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

நாதன் எல்லிஸ், சிகந்தர் ராஜா, அதர்வா தைடே, மோஹீத் ரதி, சிவம் சிங்

புள்ளிப்பட்டியல்:

நடப்பு சீசனில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி, தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மேலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இரு அணிகளும் இனி வரும் போட்டிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்:

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து இரு அணிகளும் விளையாடி வருகிறது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 15 வெற்றிகளைப் பெற்று சமமாக உள்ளன. கடைசியாக கடந்த 6 மோதல்கலில்  பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு முறை வென்றுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது. மேலும் மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இதற்கு முன்பு 8  முறை  மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி உள்ளது. இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!

'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?

Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!

TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!

Embed widget