MIvCSK, IPL 2022 LIVE: மனதையும் வென்றார்.. போட்டியையும் பொளந்தார்... கடைசி ஓவரில் கலக்கிய தோனி
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிலை என்பது இந்த தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
LIVE
Background
மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிலை என்பது இந்த தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இரு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு என்பது இப்போது முதலே கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவே இல்லை. ஏலத்தில் புதிய வீரர்களை எடுத்த பிறகு இரு அணியிலும் பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக்குரிய வகையிலே உள்ளது.
கடைசி பந்தில் பவுண்டரி... சிஎஸ்கேவுக்கு இரண்டாவது வெற்றி, மும்பை அணிக்கு மீண்டும் தோல்வி!
5 பந்துகளில் 17 ரன்கள் தேவை
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெற கடைசி 5 பந்துகளில் 17 ரன்கள் தேவை