மேலும் அறிய

Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்

கடினமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது லுங்கி என்கிடி நிலைதடுமாறி கீழே விழுந்தார். பந்தைப் பிடிக்க பின்னோக்கி ஓடிய அவர், தனது கட்டுப்பாட்டை இழந்து மல்லாக்க விழுந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டெல்லி வீரர் லுங்கி இங்கிடி கேட்ச் பிடிக்க பின்னோக்கி ஓடியபோது தடுமாறி கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. இந்த நிலையில், உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் விரைந்து அவரை ஸ்டெச்சர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கேட்ச் பிடிக்க சென்ற போது தலையில் அடி

பவுண்டரி எல்லை அருகே வந்த ஒரு கடினமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது லுங்கி என்கிடி நிலைதடுமாறி கீழே விழுந்தார். பந்தைப் பிடிக்க பின்னோக்கி ஓடிய அவர், தனது கட்டுப்பாட்டை இழந்து மல்லாக்க விழுந்தார். அப்போது அவரது தலை அல்லது கழுத்துப் பகுதி தரையில் பலமாக மோதியதாகத் தெரிகிறது. இதனால் மைதானத்திலேயே அவர் வலியால் துடித்தார்.

மைதானத்திற்குள் விரைந்த மருத்துவக் குழு

சம்பவம் நடந்த உடனே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்தனர். சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. காயம் தீவிரமாக இருக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஸ்ட்ரெச்சரில் (Stretcher) வைத்து மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடரும் சோகம்: டெல்லி அணிக்கு பின்னடைவு

நேற்று தான் பயிற்சியின் போது டெல்லி அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் காயமடைந்து ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அந்தச் சுவடு மறைவதற்குள், இன்று நட்சத்திர வீரர் லுங்கி என்கிடிக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, என்கிடியின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget