LSG vs RR: என்னது 8 பேர் பந்து வீசினார்களா?- லக்னோவுக்கு எதிராக ராஜஸ்தான் 178 ரன்கள் குவிப்பு!
லக்னோ அணி பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை 8 பேர் இன்று பந்துவீசினார்கள். அதில், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான், ஹோல்டர், ஆயுஷ் படோனி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, ஆரம்பத்திலேயே ஒரு முக்கியமான விக்கெட் சரிந்தது. வந்த வேகத்தில் அதிரடி பேட்டர் ஜோஸ் பட்லர் அவுட்டாக, அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
யஷஸ்வி, சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களின் ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் நல்ல நிலையை எட்டியது. லக்னோ அணி பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை 8 பேர் இன்று பந்துவீசினார்கள். அதில், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான், ஹோல்டர், ஆயுஷ் படோனி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு178 ரன்கள் குவித்திருக்கிறது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
A solid all-round show with the ball from @LucknowIPL. 👍 👍@ybj_19, @devdpd07 & captain @IamSanjuSamson guided @rajasthanroyals to 178/6. 👌 👌
Will #LSG chase down the target? 🤔 🤔
Scorecard 👉 https://t.co/9jNdVD6NoB #TATAIPL | #LSGvRR pic.twitter.com/Z8Tfyk7G9S
புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, இந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி முக்கியமாகும். அதனால், ஐபிஎல் ப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு பிராகசமாகும். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்