LSG vs RCB IPL 2023 Playing 11: லக்னோவுக்காக சிறப்பு படையை தயார் செய்த பெங்களூரு.. ப்ளேயிங் லெவன், இம்பேக்ட் வீரர்கள் விபரம் இதுதான்..!
LSG vs RCB IPL 2023 Playing 11: இன்றைய போட்டியில் களமிறங்கும் பெங்களூரு மற்றும் லக்னோ அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த விபரங்கள் இங்கு காணலாம்.
LSG vs RCB IPL 2023: ஐபிஎல் போட்டியின் 16வது சீசனின் 15வது லீக் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனும் பெங்களூரு வாசியுமான கே.எல். ராகுல் பந்து வீச தீர்மானித்தார்.
இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி 19 ஏப்ரல் 2022 அன்று மும்பை டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்தது. சிறிய மைதானமான இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி லக்னோ அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய லக்னோ தொடக்க விக்கெட்களை இழந்தாலும், க்ருனால் பாண்டியா (42), மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் (24) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தின் உதவியுடன் தோல்வியின் வித்தியாசத்தினை மட்டுமே குறைத்தது. இறுதியில் லக்னோ அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் மீண்டும் சூப்பர் ஜெயன்ட் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் வெய்ன் பார்னல் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணியின் ப்ளேயிங் லெவன்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
பெங்களூரு அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
கர்ண் ஷர்மா, சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், மைக்கேல் பிரேஸ்வெல், சோனு யாதவ்
லக்னோ அணியின் ப்ளேயிங் லெவன்
கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஜெய்தேவ் உனட்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னாய்
லக்னோ அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
ஆயுஷ் படோனி, ஸ்வப்னில் சிங், கிருஷ்ணப்பா கௌதம், பிரேரக் மங்காட், டேனியல் சாம்ஸ்