IPL 2024 LSG Vs PBKS: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இன்று மார்ச் 30 இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்விடைந்தது. மறுமுனையில் லக்னோ விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வியுற்றது.
இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எனவே, இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
பஞ்சாப் vs லக்னோ:
லக்னோ அணியின் முதல் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான். இன்றைய போட்டியில் அந்த தவறை லக்னோ அணி திருத்திக் கொள்ளும் என்று நம்பலாம் . கே.எல். ராகுல் மற்றும் பூரான் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
நவீன் உல் ஹக் மற்றும் ரவி பிஷ்னாய் என பந்துவிச்சு யூனிட் வலுவாக உள்ளது. மறுமுனையில் பஞ்சாப் அணியில் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும், நல்ல திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், கடந்த போட்டியில் அந்த திறனை முழுமையாக வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் தவான் உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.
டாஸ் வென்ற லக்னோ அணி:
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் இந்த சீசனின் தங்களது முதல் போட்டியை அந்த அணி பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களம் காண உள்ளது பஞ்சாப் அணி.
லக்னோ வீரர்கள்:
நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), குயின்டன் டி காக், கே.எல் ராகுல், தேவ்தட் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், எம் சித்தார்த்
பஞ்சாப் வீரர்கள்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல்,ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்