Viral Pics: தோனி களமிறங்கியபோது.. மிரண்டுபோன தருணம்.. டி காக் மனைவி இன்ஸ்டாவில் போட்ட பதிவு வைரல்..!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் எம்.எஸ்.தோனி களமிறங்கியபோது தான் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச்சில் அலார்ட் மெசேஜ் காமித்ததாக டிக் காக்கின் மனைவி பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் மகேந்திர சிங் தோனி மீது ரசிகர்கள் வைத்த மோகம் குறைந்த பாடில்லை. எம்.எஸ்.தோனி கிரிக்கெட் உலகின் சிறந்த பினிஷர்களின் ஒருவராக கருதப்படுகிறார். சர்வதேச அளவில் இந்திய அணியை கடைசி ஓவர்களில் பலமுறை வெற்றி பெற செய்த தோனி, ஐபிஎல் 2024ல் கடைசி ஓவர்களிலும் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நொறுக்கினார்.
ஐபிஎல் 2024ல் மகேந்திர சிங் தோனி இதுவரை 7 போட்டிகளில் 87 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 34 பந்துகளில் விளையாடி 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதாவது ஒவ்வொரு இரண்டாவது பந்திலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து பந்துவீச்சாளர்களை ஆட்டிப்படைக்கிறார். இது தவிர, ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.
இந்தநிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் எம்.எஸ்.தோனி களமிறங்கியபோது தான் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச்சில் அலார்ட் மெசேஜ் காமித்ததாக டிக் காக்கின் மனைவி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், வெளியிட்ட பதிவில், “ தோனி பேட்டிங் செய்ய வரும்போதெல்லாம் என் உடலில் புல்லரிக்கிறது” என தெரிவித்தார்.
De Kock's wife posted a story on Instagram saying her watch triggered a noise alert when MS Dhoni came to bat. pic.twitter.com/cpZ60Wtd6p
— Vipin Tiwari (@Vipintiwari952_) April 19, 2024
நேற்றைய போட்டியில் தோனி எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28* ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, தோனியும் 20வது ஓவரில் 101 மீட்டர் நீளமான சிக்ஸரை அடித்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
𝙎𝙞𝙢𝙥𝙡𝙮 𝙞𝙣𝙘𝙧𝙚𝙙𝙞𝙗𝙡𝙚!
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
MS Dhoni smacks a 1⃣0⃣1⃣ metre SIX into the stands 💥
Lucknow is treated with an entertaining MSD finish 💛
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #LSGvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/XIT3O43l99
இந்த சீசனில் எம்எஸ் தோனி இதுவரை பேட்டிங் செய்ய வந்த போதெல்லாம், சிறப்பாக இன்னிங்ஸ்களை விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் தள்ளாட வைக்கிறார். தோனியாக பேட்டிங் களமிறங்கும் போதெல்லாம் பந்திலேயே சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்கத் தொடங்குகிறார். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோனி முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார்.
போட்டி சுருக்கம்:
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 57 ரன்கள் குவித்து சிறப்பாக பங்காற்றினார்.
பின்னர் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார். இது தவிர, குயின்டன் டி காக் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உதவியுடன் 54 ரன்கள் எடுத்தார்.