சிஎஸ்கே ரெய்னாவை எடுக்காததன் பின்னணியில் ஜடேஜாவா? ட்விட்டரை தெறிக்கவிடும் சின்னத்தல ரசிகர்கள்!
2017ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் யார்க்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி கேப்டனாக, விக்கெட் கீப்பராக இல்லாமல் ஒரு போட்டியில் ஆடினார். அதற்கு தலைமை தாங்கியது ரெய்னாதான்.
தோனி தனது கேப்டன்சி பதவியை ஜடேஜாவிடம் கொடுத்துள்ளார் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். இத்தனை நாள் அணியை வெற்றிகரமாக தலைமை தாங்கிய தோனி இனி ஒரு அணி வீரராக மட்டும் களம் காண இருப்பது பலருக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும், ஜடேஜாவை கேப்டன் ஆக்குவதற்காகத்தான் ரெய்னா அணியில் சேர்க்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை அந்த அணி ஏலத்திற்கு முன்பாக அணியில் இருந்து விடுவித்திருந்தது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில், சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும், ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். சுமார் 10 சீசன்களுக்கு மேல், சென்னை அணிக்காக ஆடியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல அரிய சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரரான ரெய்னாவுக்கு, 'Mr. IPL' என்ற பட்டப் பெயரும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீரர், ஐபிஎல் தொடரில் களமிறங்காமல் போவது, ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. சிஎஸ்கே என்றாலே தோனிக்கு பிறகு ரெய்னா என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் ப்ராவோ, ஜடேஜா, டு பிளெஸிஸ் ஆகியோர் நினைவுக்கு வருவார்கள். அதுமட்டுமின்றி தோனிக்கு தரப்பட்ட தல என்னும் செல்லப்பெயரை 'சின்னத் தல' என்று மாற்றி அவருக்கும் கொடுத்து அழகு பார்த்தது கிரிக்கெட் ரசிகர் கூட்டம். அதற்கேற்றார்போல் சென்னை அணிக்காக அதிக ரன்கள் (5529) சேர்ந்தவரும், தோனிக்கு அடுத்ததாக அதிக போட்டிகள் விளையாடியவர் (200 போட்டிகள்) என்ற பெருமையும் கொண்டிருக்கிறார்.
Absolutely thrilled for my brother. I can't think of anyone better to take over the reins of a franchise we both had grown up in. All the best @imjadeja . It's an exciting phase and I'm sure you will live up to all the expectations and love #yellow #csk #WhistlePodu
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 24, 2022
தோனி வெகு சில போட்டிகளே ஓய்வெடுத்து விளையாடாமல் இருந்துள்ளார், அவை அனைத்திலும் ரெய்னாவே கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி விளையாடிய அத்தனை போட்டிகளிலும் வைஸ் கேப்டனாக இருந்துள்ளார். சிஎஸ்கே அணியில் தோனியே வேறொருவர் கேப்டன்சியில் விளையாடி இருக்கிறார் என்றால் அது ரெய்னாவின் கேப்டன்சியில்தான் (வரும் 26 ஆம் தேதிக்கு பிறகுதான் ஜடேஜா).
2017ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் யார்க்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி கேப்டனாக, விக்கெட் கீப்பராக இல்லாமல் ஒரு போட்டியில் ஆடினார். அதற்கு தலைமை தாங்கியது ரெய்னாதான். ஆகையால் அனைவருமே நம்பிய விஷயம் என்பது தோனிக்கு பிறகு ரெய்னாதான் என்பதுதான். ஆனால் துபாயில் நடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்-லின் போது ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட ரூம் அலாட்மெண்ட் பூசலில் இருந்தே ரெய்னா அணியில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தார். ரெய்னா தான் தோனியின் பேச்சை கேட்கவில்லை என்றும், அணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதனால் ரெய்னா, தோனி நட்பில் விரிசல் ஏற்பட்டது. ரெய்னாவின் தந்தை இறந்த போது கூட தோனி, ரெய்னாவை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்பதும் பேசு பொருள் ஆனது. அதனை தொடர்ந்து அணி நிர்வாகம் ரெய்னாவை ரீட்டெயின் செய்யாமல் போனதும், ஏலத்தில் சட்டை கூட செய்யாததும் ரெய்னா ரசிகர்களை கடும் ஏமாற்றம் அடைய செய்தது. ஒரு வேளை ரெய்னா அணியில் இருந்திருந்தால் ஜடேஜாவை கேப்டன் ஆக்க முடியாது என்கிற காரணத்தினால் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுத்து வருகின்றனர்.
11 பேர் டீம்ல 12 டீ ஷர்ட் கொடுத்து இருக்கீங்க ??
— RRR பாய் (@ValuBoy_) March 22, 2022
பின்னாடி ரெய்னா இருக்கான்..
தோழர் @ImUltimate2 ~ pic.twitter.com/tO0mIeDnVU
அப்போ என்ன திட்டமிட்டு கழட்டி விட்டதுக்கு காரணமே நீ தானா டா! ~ ரெய்னா! pic.twitter.com/Ud5bz6EQ9e
— TonyStarkツᵀ ᴴ ᴬ ᴸ ᴬ (@ajithAKthala) March 24, 2022
Hmm. , சின்ன தல ரெய்னா இருக்க வேண்டிய இடம் அது … துரோகிங்க 🫤🫤😐😐
— Tube Light 💡☄️❤️🔥 (@Blink_Blng) March 24, 2022
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, 15ஆவது சீசனில் வர்ணனையாளராக களமிறங்கவுள்ளார். இவருடன் ரவி சாஸ்திரியுடன் இந்த பணியில் இணைய உள்ளார். இது ரெய்னா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே போட்டியின்போது ரெய்னாவின் வர்ணனையை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வர்ணனை பணி குறித்துப் பேச ரெய்னா பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்டார். அப்போது சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ ஆகியோரை குறிப்பிட்டார். இதில் ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார் என பெருந்தன்மையாக கூறியிருந்தார். அதே போல இன்று ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். உள்ளே எவ்வளவு அரசியல் நடந்தாலும், அதனை உணர்வுப்பூர்வமாக எடுக்காமல் இன்றும் சென்னை அணிக்கு ஆதரவாக பேசும் ரெய்னாவை பலர் புகழ்ந்து வருகின்றனர். அணியில் இடமில்லை என்பதற்காக சோர்ந்துவிடாத ரெய்னா வர்ணனையாளராக களம் இறங்குகிறார். இதனைத் தொடர்ந்து வர்ணனை பணி குறித்துப் பேசிய ரெய்னா, “நான் அதற்கு தயாராக இருக்கிறேன். இர்பான் பதான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ரவி சாஸ்திரி ஆகியோரும் என்னுடன் இப்பணியை செய்ய உள்ளனர். அனைவரும் பழக்கப்பட்டவர்கள் என்பதால், பணி சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்களிடம் இருந்து சில டிப்ஸ்களை நிச்சயம் பெறுவேன்” எனத் தெரிவித்தார்.