IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.
![IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு! ipl rr vs dc ipl 2024-innings-highlights rajasthan royals gives 186 runs-target-to delhi capitals IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/607bb8627ae2cdebac472939493b35791711641143367732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் இன்று (மார்ச் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வரும் 9 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
நிதானமான தொடக்கம்:
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இருவரும் எதிர்பார்த்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. 7 பந்துகள் களத்தில் நின்ற யஜஸ்வி ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுத்தது. அப்போது களத்தில் நின்ற ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.
அந்த வகையில் சஞ்சு சாம்சன் தன்னுடைய பங்கிற்கு 3 பவுண்டரிகள் விளாசினார். 14 பந்துகளில் மொத்தம் 15 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் கலீல் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சில நிமிடங்களிலேயே ஜோஸ் பட்லரும் நடையைக்கட்டினார். அந்த வகையில் 16 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 ரன்கள் எடுத்தார்.
அரைசதம் விளாசிய ரியான் பராக்:
பின்னர் ரியான் பராக் உடன் ஜோடி சேர்ந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். களம் இறங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்க விட்டார் அஸ்வின். இவரது அதிரடி சிக்ஸர்களால் மளமளவென ரன்கள் உயர்ந்தது. அப்போது அக்ஸர் படேல் வீசிய பந்து விக்கெட்டை பறிகொடுத்தார் அஸ்வின். அதன்படி, 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 29 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்தார் ரியான் பராக். அஸ்வின் விக்கெட்டுக்கு பிறகு துருவ் ஜூரெல் களம் இறங்கினார்.
அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்து கொடுத்தது. இதனிடையே ஐ.பி.எல் போட்டியில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் ரியான் பராக். 34 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
FIFTY BY RIYAN PARAG IN 34 BALLS...!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 28, 2024
Parag has arrived at the IPL, what a knock. Team was struggling and Parag steps up to score a marvelous half century. pic.twitter.com/EjB76SSsUz
அப்போது துருவ் ஜூரெல் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தவகையில் 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 20 ரன்கள் எடுத்தார். இதனிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த ரியான் பராக் கடைசி வரை களத்தில் நின்று 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 84 ரன்கள் குவித்தார். இவ்வாறாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)