IPL Orange Cap Winners: ஐ.பி.எல். தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள் - முழு பட்டியல் உள்ளே!
IPL Orange Cap Winners: இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்.

ஆரஞ்சு நிற தொப்பி:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்:
ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள்:
| ஆண்டு | வெற்றியாளர்கள் | ரன்கள் | அணி |
| 2008 | ஷான் மார்ஷ் | 616 | கிங்ஸ் 11 பஞ்சாப் |
| 2009 | மேத்யூ ஹைடன் | 572 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 2010 | சச்சின் டெண்டுல்கர் | 618 | மும்பை இந்தியன்ஸ் |
| 2011 | கிறிஸ் கெய்ல் | 608 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
| 2012 | கிறிஸ் கெய்ல் | 733 | ராயல் சேலஞ்சர் பெங்களூர் |
| 2013 | மைக்கேல் ஹஸ்ஸி | 733 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 2014 | ராபின் உத்தப்பா | 660 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
| 2015 | டேவிட் வார்னர் | 562 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
|
| 2016 | விராட் கோலி | 973 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
| 2017 | டேவிட் வார்னர் | 641 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
|
| 2018 | கேன் வில்லியம்சன் | 735 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
| 2019 | டேவிட் வார்னர் | 692 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
| 2020 | கே.எல். ராகுல் | 670 | பஞ்சாப் |
| 2021 | ருதுராஜ் கெய்க்வாட் | 635 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 2022 | ஜோஸ் பட்லர் | 863 | ராஜஸ்தான் ராயல்ஸ் |
| 2023 | சுப்மன் கில் | 890 | குஜராத் டைட்டன்ஸ் |
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?




















