மேலும் அறிய

IPL Final 2026 RCB vs GT: 156 ரன்கள் டார்கெட்! ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்லுமா ஆர்சிபி? மிரட்டல் பவுலிங் போட்ட பெங்களூர் பாய்ஸ்!

IPL 2026 Final RCB vs GT: அகமதாபாத்தில் நடந்து வரும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு குஜராத் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அடுத்தடுத்து அவுட்டான குஜராத் டாப்பர்ஸ்:

அகமதாபாத் மைதானம் சொந்த மைதானம் என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் கேப்டன் சுப்மன் கில் - சாய் சுதர்சன் களமிறங்கினர். ஆட்டத்தை தொடங்கிய சாய் சுதர்சன் ஜேக்கப் டஃபி ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி முதல் ஓவரை அதிரடியாக தொடங்கினார். 

மறுமுனையில் கேப்டன் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், ஹேசில்வுட் பந்தில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் குஜராத்தின் முக்கிய வீரரான சாய் சுதர்சன் 12 பந்துகளில் 12 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் அவுட்டானார்.

குருணல் சாமர்த்தியம்:

பின்னர், அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இளம் வீரர் நிஷாந்த் சிந்துவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவே ஆடினர். புவனேஷ்வர், ஹேசில்வுட், ரஷீக் சலார் சிறப்பாக பந்துவீசியதால் இவர்கள் ஓரிரு ரன்களாகவே எடுத்தனர். அதிரடிக்கு மாற முயன்ற நிஷாந்த் 3 பவுண்டரி விளாசிய நிலையில் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

பின்னர், வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இவர்கள் நிதானமாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, குருணல் பாண்ட்யாவும் சுழலில் அச்சுறுத்த குஜராத் தடுமாறியது. ஜேக்கஃப் டஃபி பந்தில் வாஷிங்டன் சுந்தர் கொடுத்த கடினமான கேட்ச்சை ஜோர்டன் காக்ஸ் பிடித்தபோதும் அது தரையில் பட்டதால் நாட் அவுட் வழங்கப்பட்டது. 

15வது ஓவரிலே 100 ரன்கள்:

இதனால், வாழ்வு பெற்ற வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆட பட்லர் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சிக்கு குருணல் பாண்ட்யா முட்டுக்கட்டை போட்டார். அவர் சிக்ஸருக்கு அடிக்க இறங்கி வந்தபோது சாமர்த்தியாக பந்தை ஒயிட் போல வீசியதால் ஜிதேஷ் சர்மா ஸ்டம்பிங் செய்தார். மிக மிக முக்கியமான வீரரான பட்லர் 23 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அவுட்டாக 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை குஜராத் இழந்தது.

பின்னர், ஆல் ரவுண்டர் அர்ஷத் கான் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்தார். அவர் அதிரடியாக ஆடினார். அவர் 2 சிக்ஸர்களை விளாசி குஜராத் அணிக்காக முதல் சிக்ஸர்களை விளாசிய நிலையில், அவரை ஹேசில்வுட் அவுட்டாக்கினார். அவர் 6 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர், வாஷிங்டன் சுந்தர் - ராகுல் திவேதியா இணைந்தனர். 

அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர்:

குஜராத் அணி 15வது ஓவரிலே 100 ரன்களை எட்டியது. அதிரடி காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ராகுல் திவேதியா சிக்ஸர் அடிக்க முயற்சிக்க அதை படிதார் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதனால், ராகுல் திவேதியா 7 ரன்களில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் ஒரு புறம் ஓரிரு ரன்களாக எடுத்தார். அவருடன் இணைந்த ஹோல்டரும் விக்கெட் விழுவதை தடுப்பதற்காக ஓரிரு ரன்களாகவே எடுத்தார்.

அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தால் வாஷிங்டன் சுந்தர் அதிரடிக்கு மாறினார். அவர் ஹேசில்வுட் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் வாஷிங்டனுக்கு ஒத்துழைப்பு அளிக்க அதிரடி காட்ட முயற்சித்த ஹோல்டர் புவனேஸ்வர் பந்தில் ஹேசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்து  அவுட்டானார்.

வாஷிங்டன் அரைசதம்:

8வது விக்கெட்டிற்கு உள்ளே வந்த ரஷீத்கான் சிக்ஸர் விளாச கடைசி ஓவரில் குஜராத் 150 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த பந்திலே அவர் அவுட்டாக குஜராத் அணிக்காக தனி ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.

156 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் மகுடம்:

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பி்ற்கு 155 ரன்களை எட்டியது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை அவுட்டாகாமல் 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்திருந்தார், ரபாடா 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆர்சிபி அணிக்காக இளம் வீரர் ரஷீக் சலார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்,  ஹேசில்வுட், புவனேஷ்வர் தலா 2 விக்கெட்டுகளையும், குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர், ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 38 ரன்கள் அளித்தார். 156 ரன்கள் எடுத்தால் இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget