Watch Video: சாரு ஷர்மா செய்த தவறு... கலீல் அகமதுவை இழந்த மும்பை இந்தியன்ஸ்- வைரல் வீடியோ !
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெற்றது.
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுடைய அணிக்கு வீரர்களை எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது சாரு சர்மா செய்த தவறு தொடர்பான வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்காக ஏலம் கேட்கப்பட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 50 லட்சம் என்ற அடிப்படை விலையில் இருந்து இவருக்கு 5 கோடி ரூபாய் வரை ஏலத் தொகை சென்றது.
THE 5.5 CRORE MISTAKE
— Negotium (@teamnegotium) February 15, 2022
Charu Sharma,the stand in auctioneer for the IPL mega auction 2022 has accidentally sold Khaleel Ahmed to DC for 5.25 crore instead of MI which had initiated the 5.25 crore bid first.#Khaleel #IPLAuction #Cricket pic.twitter.com/fNLJ1Xepko
அப்போது கடைசியாக 5.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் கேட்டது. அதன்பின்னர் 5.50 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் கேட்கவில்லை. ஆனால் ஏலத்தை நடத்தி வந்த சாரு சர்மா கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டதாக கூறி கலீல் அகமதை டெல்லி அணி ஏலம் எடுத்ததாக கூறினார்.
Appreciable by Charu Sharma filling up at a moment's notice, but he goofed up a lot during the auction process. Khaleel Ahmed to DC being the prime example!
— Cricketjeevi (@wildcardgyan) February 13, 2022
Also the auction took lot longer than it should have!
இந்தச் சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக பலரும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில் இந்த தவறை மும்பை இந்தியன்ஸ் அணி கூட கண்டு கொள்ளவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
#IPLMegaAuction2022
— Tanay (@Tanay_BOM27) February 13, 2022
Mumbai Indians on that Khaleel Ahmed bid confusion- pic.twitter.com/oNIAFAdfof
There's a mistake in Amount of Bidding of Khaleel Ahmed.#IPLMegaAuction2022 pic.twitter.com/hkodueRq2o
— Ritik (@RitikPics) February 13, 2022
மேலும் படிக்க:ஈ சாலா கப் நமதே.. ஆர்.சி.பிக்கு 2022 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பின்னடைவா?- மேக்ஸ்வேல் இல்லையா?