மேலும் அறிய

IPL 2026 Qualifier 1: இரண்டாவது கோப்பைக்காக முதலாவதாக செல்லப்போவது யார்? நாளை யுத்தம் செய்யும் ஆர்சிபி - குஜராத்!

IPL 2026 Qualifier 1: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் - ஆர்சிபி அணிகள் நாளை தரம்சாலாவில் மோதுகின்றனர்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி, சன்ரைசர்ஸ், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

குவாலிஃபயர் 1:

இந்த சூழலில், இறுதிப்போட்டிக்குச் செல்லப்போகும் முதல் அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் குவாலிஃபயர் 1 போட்டி நாளை நடக்கிறது. தரம்சாலாவில் நாளை இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் மிகுந்த முனைப்புடன் ஆடுவார்கள். இதனால், நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஆர்சிபி - குஜராத்:

இரு அணிகளைப் பொறுத்தமட்டிலும் அனுபவமும், திறமையும், இளமையும் கலந்த அணியாகவே காணப்படுகிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்தமட்டில் தொடக்க வீரராக விராட் கோலியுடன் நாளை பில் சால்ட் களமிறங்குவாரா? அல்லது வெங்கடேஷ் ஐயர் களமிறங்குவாரா? என்ற கேள்வி உள்ளது. 

பேட்டிங் பட்டாளம்:

சால்ட் அணியின் ஆஸ்தான வீரராக இருந்தாலும், அவர் காயத்தில் இருந்து மீண்டு தற்போதுதான் அணிக்கு திரும்பியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் தனக்கு சரியாக கிடைத்த 2 வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். இதனால், அவருக்கே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா என ஆர்சிபி-யின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவாக உள்ளது. இவர்கள் தங்களது முழு திறமையும் காட்ட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

குஜராத் அணியும் இளமையும், திறமையும் கலந்த அணியாக உள்ளது. கேப்டன் கில் - சாய் சுதர்சன் அந்த அணியின் தூணாக உள்ளனர். இவர்களின் திறமையான பார்ட்னர்ஷிப் நாளைய போட்டியில் தொடர வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும். பட்லர் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். இவர்களின் டாப் ஆர்டர் கலைந்தால் அந்த அணி ஸ்தம்பித்து விடும். மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஹோல்டர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

அசத்த காத்திருக்கும் ஆல்ரவுண்டர்கள்:

ஆர்சிபி அணியில் ஆல்ரவுண்டர்களாக குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் உள்ளனர். குறிப்பாக, குருணல் பாண்ட்யா அந்த அணியின் நம்பிக்கையாக உள்ளார். குஜராத் அணிக்கு ரஷீத் கான், ஹோல்டர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். 

வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:

சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும் அணியே  இறுதிப்போட்டிக்குச் செல்வதை தீர்மானிக்கும் அணியாக திகழும். தரம்சாலா பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானம் என்பதால் பந்துவீச்சில் அசத்தும் அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக செல்லும்.  ஆர்சிபி அணியில் பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், ரஷீக் சலார், ஜேக்கப் டஃபி உள்ளனர். மைதானத்தைப் பொறுத்து நான்கு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. சுழலில் க்ருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா உள்ளனர். 

குஜராத் அணியைப் பொறுத்தமட்டில் முகமது சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான் அந்த அணிக்கு வேகப்பந்துவீச்சில் பலமாக உள்ளனர். சுழலில் ரஷீத்கான் பலமாக உள்ளார்.

விறுவிறுப்பு:

இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் இறுதிப்போட்டிக்குச் செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றாலும், இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்லவே இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget