IPL 2025: பிளே ஆஃப் ரேசில் பல்தான்ஸ்... டாப் 4-ல் மும்பை! இன்றாவது பெங்களூரில் வெற்றிப்பெறுமா ஆர்சிபி
RCB vs RR: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கள்து உள்ளூர் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாமல் உள்ளது.

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக டாப் 4 இடத்திற்குள் மும்பை அணி காலடி எடுத்து வைத்துள்ளது, மற்ற அணிகளின் நிலை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
மும்பை vs ஹைதராபாத்:
ரோஹித் சர்மாவின் (70) தொடர்ச்சியான இரண்டாவது அரைசதத்தால், மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது, இது புள்ளிகள் பட்டியலில் முந்தைய ஆறாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது, இந்தப்போட்டியில் டாசில் வெற்றிப்பெற்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது, பேட்டிங்கை தொடங்கிய SRH அணி 35/5 என்று தடுமாறியபோது. ஹென்ரிச் கிளாசென் 71 மற்றும் அபினவ் மனோகர் 43 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 143 ரன்களை எட்டியது.
பின்னர் இலக்கை துரத்திய மும்பை அணி ரோகித் சர்மாவின் அதிரடியில் 15.4 ஓவர்களில் 146/3 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியல்:
| அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | என்.ஆர்.ஆர். |
| குஜராத் டைட்டன்ஸ் | 8 | 6 | 2 | 12 | 1.104 |
| டெல்லி கேபிடல்ஸ் | 8 | 6 | 2 | 12 | 0.657 |
| மும்பை இந்தியன்ஸ் | 9 | 5 | 4 | 10 | 0.673 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 8 | 5 | 3 | 10 | 0.472 |
| பஞ்சாப் கிங்ஸ் | 8 | 5 | 3 | 10 | 0.177 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 9 | 5 | 4 | 10 | -0.054 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 8 | 3 | 5 | 6 | 0.212 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 8 | 2 | 6 | 4 | -0.633 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 8 | 2 | 6 | 4 | -1.361 - |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 8 | 2 | 6 | 4 | -1.392 |
இன்றைய போட்டி:
இன்று ஐபிஎல்லில் நடைப்பெறும் 41வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளது. ஆர்சிபி அணி வெளியூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் சொந்த மைதானத்தில் இன்னும் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. முந்தைய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்து, ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் அணி சமீப காலமாக எந்த வெற்றியையும் பெற முடியாமல் திணறி வருகிறது. கடந்த நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து, வெறும் 4 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்ப்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் அவர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.
உத்தேச அணி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ரோமாரியோ ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யவன்சி, ரியான் பராக்(கேப்டன்), துருவ் ஜூரல்(கீப்பர் ஷிம்ரோன் ஹெட்மையர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே





















