Rishabh Pant:என்ன RCB-யில் இணைய போறேன்னா? - ரசிகரை கண்டித்த ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சீசன் 18:
ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலாம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் ஐபிஎல் அணிகள் இப்போதே தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றன. அதன்படி அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டை புதிய பயிற்சியாளராக நியமித்தது.
அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங்கை தங்களது அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்தது. இப்படி பல்வேறு மாற்றங்களை அணிகள் செய்து வரும் வேளையில், வீரர்களும் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது. அந்தவகையில் அண்மையில் கூட ஆர்சிபி ரசிகர் ஒருவர், ஆர்சிபி அணிக்கு வரப் போகிறீர்களா? என கேட்க, அதற்கு பதில் அளித்த கே.எல்.ராகுல், ‘நம்புவோம்’ என தெரிவித்திருந்தார். அதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாறலாம் என்ற கூறப்படுகிறது.
அந்த வகையில், ரிஷப் பண்ட் ஆர்சிபி அணியில் இணைய உள்ளதாகவும் இது தொடர்பாக ஆர்சிபி அணியை தொடர்பு கொண்டு ரிஷப் பண்ட் பேசியதாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.
ரசிகரை கண்டித்த ரிஷப் பண்ட்:
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட். இது தொடர்பாக வெளியான பதிவிக்கு கீழே மறுப்பு பதிவை ரிஷப் பண்ட் பதிவு செய்துள்ளார். அதில், "போலி செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இவ்வளவு பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள். ஏன் இவ்வளவு மோசமானவர்களாக இருக்கிறீர்கள்.
🚨 Rishabh Pant approached RCB 🚨
— Rajiv (@Rajiv1841) September 26, 2024
- Pant approached RCB through his manager earlier this week as he foresee a captaincy vacancy there but got declined by RCB's management.
Virat doesn't want Pant in RCB due to his Political Tactics in Indian team as well as in DC.
- RCB Source pic.twitter.com/B6KY2gj4gp
எக்காரணம் கொண்டும் நம்பத்தகாத சூழலை உருவாக்காதீர்கள். இது முதல் முறை அல்ல, கடைசியாகவும் இருக்காது, ஆனால் நான் இதை வெளியிட வேண்டியிருந்தது .தயவுசெய்து எப்போதும் சோர்ஸ் என்று அழைக்கப்படும் ஆதாரங்களை மீண்டும் சரிபார்க்கவும். ஒவ்வொரு நாளும் அது மோசமாகி வருகிறது. இது உங்களுக்காக மட்டுமல்ல, தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்காகவும்.டேக் கேர்"என்று கூறியுள்ளார்.