Dhoni Retirement: உறுதியானது தோனியின் ஓய்வு? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு! முதன்முறையாக வந்த பெற்றோர்கள்
Dhoni Retirement: இதுவரை தோனி விளையாடிய எந்த போட்டியையும் பார்க்க வராத தோனியின் பெற்றோர்கள் இன்று மைதானத்திற்கு வந்திருப்பதால் தோனி ஓய்வு பெறுவது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக உலா வந்தவர் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் ஆடி வருகிறார். நடப்பு சீசனே தோனியின் கடைசி சீன் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், தோனியின் பேட்டிங் ஆர்டர், அவரது உடல்தகுதி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி ஓய்வா?
இந்த நிலையில், டெல்லி அணியுடன் இன்று நடக்கும் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாவிட்டாலும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
நேரில் வந்த தோனியின் பெற்றோர்கள்:
டெல்லி அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்த ஐபிஎல் போட்டியை தோனியின் தந்தை மற்றும் தாய் நேரில் வந்து பார்த்து வருகின்றனர். தோனி விளையாடும் போட்டியை அவரது மனைவி மற்றும் மகள் ஜிவா இதுவரை பல முறை நேரில் வந்து பார்த்துள்ளனர். ஆனால், தோனியின் பெற்றோர்கள் ஒருமுறை கூட அவர் ஆடிய போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்த்தது இல்லை.
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை தோனி வென்று கொடு்த்த போட்டிகளின்போது கூட தோனியின் பெற்றோர்கள் இதுவரை நேரில் சென்று போட்டியை கண்டுகளித்தது இல்லை. ஆனால், தோனியின் இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் அவரது தந்தை பான்சிங் தோனி மற்றும் தாய் தேவகி தேவி இதுவரை ஒருமுறை கூட மைதானத்திற்கு வந்து தோனியின் போட்டியை நேரில் வந்து பார்த்தது இல்லை.
வேதனையில் ரசிகர்கள்:
தோனியின் 20 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முறை கூட மைதானத்திற்கு தோனியின் ஆட்டத்தைப் பார்க்க வராத தோனியின் பெற்றோர்கள் இன்று வந்திருப்பதால் இன்று தோனி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடும் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 43 வயதான தோனி 268 போட்டிகளில் 24 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 841 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்களை எடுத்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்கள் உள்பட 1282 ரன்கள் எடுத்துள்ளார். தோனி 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 73 அரைசதங்கள், 10 சதங்கள் உள்பட 10 ஆயிரத்து 773 ரன்களை எடுத்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 33 அரைசதங்கள், 6 சதங்கள் உள்பட 4 ஆயிரத்து 876 ரன்களை எடுத்துள்ளார்.



















