IPL 2025 CSK vs KKR: தனி ஆளாக தாக்கிய நரைன்! சென்னையை கொளுத்திய கொல்கத்தா அசால்ட் வெற்றி!
IPL 2025 CSK vs KKR: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு சுனில் நரைன், மொயின் அலி, ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழலில் மிரட்டினர்.
இதனால், கொல்கத்தா அணிக்கு சென்னை அணி 104 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இந்த போட்டியில் மிக குறைந்த இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னையை 10.2 ஓவர்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி கொல்கத்தாவிடம் தோல்வி கண்டது.
எளிய இலக்குடன் களமிறங்கிய டி காக் - சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தை தொடங்கிய சுனில் நரைன் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். இந்த போட்டியால் மிக வேகமாக இலக்கட எட்டினால் கொல்கத்தா அணிக்கு ரன் ரேட் அதிகரிக்கும் என்பதால் டி காக் - சுனில் நரைன் அதிரடி காட்டினர்.
குறிப்பாக, சுனில் நரைன் சிக்ஸராக விளாசினார். கலீல் அகமது, அஸ்வின் பந்துவீச்சை விளாசினர். அறிமுக பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் டி காக்கை அவுட்டாக்கினார். அவர் 16 பந்துகளில் 3 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனாலும், அப்போதே கொல்கத்தா 4.1 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் ரகானே நிதானம் காட்ட மறுமுனையில் பட்டாசாய் சுனில் நரைன் வெடித்தார்.
இலக்கின் அருகில் நெருங்கிய நிலையில் சுனில் நரைன் 18 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று தனது 3வது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது.
இந்த வெற்றியால் ஆர்சிபி-யை புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளி 3 வெற்றிகளுடன் 4வது இடத்திற்கு கொல்கத்தா அணி வந்துள்ளது. ரன்ரேட்டும் நன்றாக ஏறியுள்ளது.




















