IPL 2024 Points Table: ராஜஸ்தான் முதலிடம்.. அப்போ! சென்னைக்கு எந்த இடம்..? புள்ளிப்பட்டியல் விவரம் இதோ!
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் ஏழாவது வெற்றியைப் பெற்றது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் புள்ளிப்பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியலில் மற்ற அணிகள் நிலைமை என்ன..?
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை தலா 8 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் காரணமாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐந்தாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஆறாவது இடத்திலும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
கடைசி இடத்தில் பெங்களூரு அணி:
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடைசி இடத்தில் அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதையடுத்து, ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி, கிட்டதட்ட பிளே ஆஃப் கனவு கலைந்தது.
அட்டவணை:
தரவரிசை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
டை |
முடிவு இல்லை |
புள்ளிகள் |
ரன் ரேட் |
1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) |
8 |
7 |
1 |
0 |
0 |
14 |
0.698 |
2 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) |
7 |
5 |
2 |
0 |
0 |
10 |
1.206 |
3 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) |
7 |
5 |
2 |
0 |
0 |
10 |
0.914 |
4 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) |
7 |
4 |
3 |
0 |
0 |
8 |
0.529 |
5 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) |
7 |
4 |
3 |
0 |
0 |
8 |
0.123 |
6 |
குஜராத் டைட்டன்ஸ் (GT) |
8 |
4 |
4 |
0 |
0 |
8 |
-1.055 |
7 |
மும்பை இந்தியன்ஸ் (MI) |
8 |
3 |
5 |
0 |
0 |
6 |
-0.227 |
8 |
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) |
8 |
3 |
5 |
0 |
0 |
6 |
-0.477 |
9 |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) |
8 |
2 |
6 |
0 |
0 |
4 |
-0.292 |
10 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) |
8 |
1 |
7 |
0 |
0 |
2 |
-1.046 |
ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:
1. விராட் கோலி (RCB): 379 ரன்கள், சராசரி: 63.16, அதிகபட்ச ஸ்கோர்: 113*, ஸ்ட்ரைக் ரேட்: 150.39, 1 சதம், 2 அரைசதம்
2. டிராவிஸ் ஹெட் (SRH): 324 ரன்கள், சராசரி: 54.00, அதிகபட்ச ஸ்கோர்: 102, ஸ்ட்ரைக் ரேட்: 150.00, 1 சதம், 2 அரைசதம்
3. ரியான் பராக் (RR): 318 ரன்கள், சராசரி: 63.60, அதிகபட்ச ஸ்கோர்: 84*, ஸ்ட்ரைக் ரேட்: 161.42, 3 அரைசதம்
4. சஞ்சு சாம்சன் (RR): 314 ரன்கள், சராசரி: 62.80, 82*, ஸ்ட்ரைக் ரேட்: 152.42, 3 அரைசதம்
5. ரோஹித் சர்மா (MI): 303 ரன்கள், சராசரி: 43.28, அதிகபட்ச ஸ்கோர்: 105*, ஸ்ட்ரைக் ரேட்: 162.90, 1 சதம்
பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:
1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 15.69, எகானமி: 6.37
2. யுஸ்வேந்திர சாஹல் (RR): 13 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 20. , எகானமி: 8.83
3. ஹர்ஷல் படேல் (PBKS): 13 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 21.38, எகானமி: 9.58
4. ஜெரால்ட் கோட்ஸி (MI): 12 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 4/34, சராசரி: 24.00, எகானமி: 10.10
5. சாம் கர்ரன் (PBKS): 11 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/28, சராசரி: 19.18, எகானமி: 8.79