மேலும் அறிய

IPL 2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள்... ஆதிக்கம் செலுத்திய கோலி! அடுத்த இடத்தில் யார்?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் 2024:

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நீண்ட நாட்களுக்குப் பின் களம் கண்ட கோலி:

முன்னதாக இந்த போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது விராட் கோலியின் பேட்டிங்கிற்காகத்தான். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு நீண்ட நாட்களாக விளையாடாத கோலி விளையாடினார். இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக  20 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 21 ரன்கள் எடுத்தார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 5 வீரர்கள்:

இந்நிலையில் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் இறங்கியதால் விராட் கோலியை ரசிகர்கள் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.

அதேபோல், அதிகம் தேடப்பட்ட இரண்டாவது வீரராக இருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ரோகித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறார். கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுப்மன் கில். அந்த வகையில் முதன் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த உள்ளார். இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறார்.

நான்காவது இடத்தில் இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர். நேற்று (மார்ச் 23) ஆம் தேதி நடைபெற்ற 3 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனிடையே தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டராக அவர் இருக்கிறார். அவருக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் இருப்பவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இச்சூழலில் தான் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிக தேடப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ranji Trophy Match Fees: அட்ரா சக்க..! ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கும் போனஸ் - பிசிசிஐ போடும் அட்டகாசமான திட்டம்

மேலும் படிக்க: MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம் - இன்று மாறுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget