RR vs RCB LIVE Score: சதத்துடன் ஆட்டத்தை வென்று கொடுத்த ஜோஸ் பட்லர்; வீணாய்ப் போன விராட் சதம்!
IPL 2024 RR vs RCB LIVE Score Updates:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலாக மைதானத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் சந்தித்து, மூன்று போட்டிகளில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இதனால் ராயல் சேலன்ஞ்சர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை.
இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. ஒரு போட்டி தடைபட்டது.
இன்றைய போட்டி நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் மோதியுள்ளது. இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மைதானத்தில் நடப்பு சீசனில் இதுவரை இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 193 ரன்களையும் , இரண்டாவது போட்டியில் 185 ரன்களையும் எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 54 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 34 போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
RR vs RCB LIVE Score: சதத்துடன் ஆட்டத்தை வென்று கொடுத்த ஜோஸ் பட்லர்; வீணாய்ப் போன விராட் சதம்!
ராஜஸ்தான் அணி 19.1ஓவர்களில் 4விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இறுதிவரை களத்தில் இருந்த பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 100 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டி ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரின் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
RR vs RCB LIVE Score: 150 ரன்களைக் கடந்த ராஜஸ்தான்!
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
RR vs RCB LIVE Score: முடிவுக்கு வந்த பார்ட்னர்ஷிப்; சஞ்சு சாம்சன் அவுட்
86 பந்துகளில் 147 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்சன் மற்றும் பட்லர் கூட்டணி பிரிந்தது. சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை 42 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
RR vs RCB LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது.. இலக்கை நெருங்கும் ராஜ்ஸ்தான்
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
RR vs RCB LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 124 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.