RR vs PBKS : பலமான ராஜஸ்தானை சமாளிக்குமா பஞ்சாப்? டாஸ் வென்ற RR பேட்டிங்!
IPL 2024 RR vs PBKS: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜ்ஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுவதாக அட்டவணைப் படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று அதாவது மே மாதம் 15ஆம் தேதி மோதுகின்றது. இந்த ஆட்டம் கவுகாத்தி மைதானத்தில் தொடங்கியது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வீரர்களை தாய்நாட்டிற்கு அழைத்ததால், இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சாம் கரன், லிவிங்ஸ்டன், பேரிஸ்டோவ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்ட நிலையில், இன்று இவர்கள் மூவரும் களமிறங்கியுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் விளையாடவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

