Rishabh Pant: தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்... ரசிகர்கள் உற்சாகம்! வைரல் வீடியோ!
ரிஷப் பண்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் 2024:
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்:
Rishabh pant batting at NCA Practice match #pant #rishabhpant #ViratKohli #RohitSharma #AnushkaSharma pic.twitter.com/S85qKt2GrB
— Rishabh pant (@rishabh_pant_7) February 21, 2024
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியானது, அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூட ரிஷப் பண்ட் விளையாடுவதை உறுதிபடுத்தினார்.
அதேபோல் இந்த முறை எப்படியும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட வேண்டும் என்று பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் ரிஷப் பண்ட். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த வீடியோவில் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வைரல் வீடியோ:
Rishabh Pant smashing in the Practice matches. 🔥🇮🇳pic.twitter.com/hLswXpC6xt
— Johns. (@CricCrazyJohns) February 21, 2024
இதனால் இந்த முறை ஐ.பி.எல் போட்டியில் இவர் விளையாடுவது உறுதி என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் நேற்று வெளியானது. அதில், பேட்டிங்கில் மட்டுமே ரிசப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli: ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்... கிங் கோலியின் சாதனை! விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்