(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024 Points Table: குஜராத்தை ஓடவிட்ட சென்னை; புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!
IPL 2024 Points Table: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
17வது சீசன் ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இமாலய தோல்வியைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் தனது இரண்டாவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் நான்கு புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதேபோல் தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.
புள்ளிப்பட்டியல் (சென்னை- குஜராத் போட்டிக்கு பின்னர்)
சென்னை அணிக்கு இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17வது ஐபிஎல் சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- சென்னை அணி இந்த போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டும் சுழற்பந்து வீசியது.
- சென்னை அணியின் சார்பில் இந்த சீசனில் முதல் அரைசதம் விளாசப்பட்டுள்ளது. அதனை ஷிவம் துபே விளாசினார்.
- சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாள்ர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்த தொடரில் இதுவரை 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தொடர்ந்து தன்வசப்படுத்தியுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் தான் எதிர் கொண்ட முதல் பந்தினை சிக்ஸருக்கு விளாசினார் குட்டி ரெய்னா என அழைக்கப்படும் சமீர் ரிஷ்வி.
- கேப்டனாக ருதுராஜ் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
- ரச்சின் ரவீந்திரா மூன்று கேட்ச்கள் பிடித்தார்.
- சென்னை அணியின் ரச்சின் ரவீந்திராவுக்கு எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருது வழங்கப்பட்டது.
- இந்த போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசிய ஷிபம் துபேவுக்கு அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற விருது வழங்கப்பட்டது.
- அதேபோல் இந்த போட்டியில் 4 பவுண்டரி விளாசிய ரச்சின் ரவீந்திராவுக்கு அதிக பவுண்டரி விளாசிய வீரர் என்ற விருது வழங்கப்பட்டது.
- சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சஹார், தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
- 23 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் உட்பட 51 ரன்கள் குவித்த ஷிவம் துபேவிற்குப் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.