மேலும் அறிய

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

ரோகித் சர்மா ஐபிஎல் லீக்கில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றால் அது நிச்சயம் மும்பை அணிக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய லீக் போட்டி என்றால் அது ஐபிஎல்தான். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த லீக்குக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் வீரர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த லீக்கில் தற்போது மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. இதுவரை மொத்தம் 16 ஐபிஎல் லீக்குகள் முடிந்துள்ளது. இதில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வாங்கி அதிகமுறை கோப்பைகளை வாங்கிய அணிகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. இதையடுத்து கொல்கத்தா அணி 2 முறையும், டெக்கான் சார்ஜஸ் ஹைதராபாத் அணி ஒரு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு முறையும் குஜராத் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

ஐபிஎல் தொடரில் ஆண்ட பரம்பரை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இரண்டு அணிகளும் கோப்பையை வெல்ல முக்கிய காரணமே அந்தந்த அணிகளின் கேப்டன்கள்தான். சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரிய ஆச்சரியம் நிறைந்த செய்தி கிடையாது. காரணம் அவர் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன். ஆனால் மும்பை அணிக்கு 2013ஆம் ஆண்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய முடிவு. அப்போது அணியில் ஒரு வீரராக இருந்த ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு என்பது மிகவும் சவாலான பணி. அதாவது அதற்கு முன்னர் அந்த பொறுப்பில் இருந்தவர்கள் யார் யார் என்று பார்க்கும்போது ரோகித் சர்மாவுக்கு சற்று தயக்கமாகத்தான் இருந்து இருக்கும். அதாவது மும்பை அணியின் முதல் கேப்டன் சச்சின் தெண்டுல்கர். அதன் பின்னர் அந்த பொறுப்பு ஆஸ்திரேலியா அணியின் மேஸ்ட் சக்சஸ்ஃபுல் கேப்டனாக விளங்கிய ரிக்கி பாண்டிங்கிடம் வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் தலைமையில் மும்பை அணி கோப்பையை வெல்லவில்லை. 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

இந்த நிலையில்தான் மும்பை அணித் தலைமைக்கு மிகவும்  சரியான நபராக தெரிந்த நபர் ரோகித் சர்மா. ரோகித் சர்மா தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடக்கத்தில்  டெக்கான் சார்ஜஸ் ஹைதராபாத் அணியில் தொடங்கினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணியால் வாங்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான் ரோகித் சர்மா.

ஆனால் இன்றைக்கு ரோகித் சர்மா உருவாக்கியுள்ள சாம்ராஜியம் என்பது மும்பை அணியைக் கடந்து இந்திய அணியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணியில் இன்றைக்கு விளையாடும் வீரர்களில் பாதி வீரர்கள் மும்பை அணியின் வீரர்கள்தான். அதாவது ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஹர்திக் பாண்டியா, பும்ரா என மொத்தம் 6 வீரர்கள் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டபோது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் வைக்கப்பட்ட பெரும் கேள்வி, மும்பை அணிக்கு என்னதான் ஆச்சு? அனுபவம் வாய்ந்த வெற்றிகளைப் பெற்ற ரிக்கி பாண்டிங் அணியில் இருக்கும்போது எப்படி அனுபவமே இல்லாத ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது என்பதுதான். இதையெல்லாம் தெரிந்து கொண்ட ரோகித் சர்மா அப்போது எதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால் அன்றைக்கு அவர் கேப்டனாக செயல்பட்ட காலத்தில் மற்ற அணிகளின் கேப்டன்களாக இருந்தவர்கள் குமார் சங்ககரா, ஆடம் கில்கிறிஸ்ட், தோனி,  டிராவிட், ஜெயவர்தனே போன்றவர்கள். 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

ஆனால் இப்படி அனுபவம் வாய்ந்த கேப்டன்களை எதிர்கொண்டு அவர்களின் கேம்-ப்ளேனை முறியடித்து மும்பை அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோப்பையில் மும்பையின் பெயரை பதிக்க வைத்த கேப்டன் ரோகித் சர்மாதான். இவரது தலைமையில் மும்பை அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. இதன் மூலம் ஐபிஎல் லீக்கில் 5 முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை ரோகித் மும்பை அணியை 5 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று 5 முறையும் கோப்பையை வென்றுளார். 

இந்த நிலையில்தான் அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது தலைமையில் இந்திய அணி ஒரு டி20 உலகக் கோப்பை, ஒரு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடி உள்ளது. இதில் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை தகுதி பெற்றது. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளைப் பொறுத்த வரையில் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இரண்டு வடிவ போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தார். 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

இதற்குப் பின்னர்தான் ரோகித் சர்மா குறித்து பல்வேறு கேள்விகள் ஊடகங்களில் பூதாகரமாக மாறியுள்ளது. அதாவது, ரோகித் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும். ஆனால் இதற்கெல்லாம் ரோகித் தரப்பில் எந்த பதிலும் இல்லை. அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து ரோகித் ஓய்வு எடுக்க முடிவு செய்துவிட்டார். அதனால்தான் குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியுள்ளது, இனி மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாதான் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்தும் இதுவரை எந்த விளக்கமும் ரோகித் தரப்பில் இல்லை. 36 வயது நிரம்பிய ரோகித் சர்மா நினைத்தால் இன்னும் ஒரு ஐசிசி தொடரில் விளையாட முடியும். தனது உடல் நலனில் மிகவும் அக்கறை காட்டினால் அடுத்த உலகக் கோப்பையிலும் கூட ரோகித் விளையாடலாம், ஆனால் இது அவருடைய மனநிலையைப் பொறுத்ததுதான். 

Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?

ஆனால் ரோகித் சர்மா ஐபிஎல் லீக்கில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றால் அது நிச்சயம் மும்பை அணிக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஐபிஎல் லீக்கில் மோஸ்ட் சக்ஸ்சஸ்ஃபுல் கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா மட்டும்தான். இப்படியான ரோகித் சர்மாவின் ஐபில் வாழ்க்கை வரும் காலங்களில் எப்படி இருக்கப்போகின்றது என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால் நேற்று அதாவது நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற ட்ரேடிங்கின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே “ரோகித் சர்மா எப்படியும் 4 முதல் 5 ஆண்டுகள் நிச்சயம் ஐபிஎல் விளையாடுவார். அவர் விளையாடும் வரை மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாதான் செயல்படுவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

அதேபோல் இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறுகையில்,” மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ஒரு மலை. அதில் அவர் இருக்கும்வரை பாண்டியாவால் கேப்டனாகவே முடியாது. ரோகித் விலகும் வரை ஹர்திக் பாண்டியா வீரராகவே தொடர முடியும்” என குறிப்பிட்டுள்ளார். மூத்த வீரர்கள் கூறுவதைப் போல் நடக்குமா நடக்காதா என்பதை ரோகித் சர்மாதான் விளக்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget