KKR vs SRH LIVE Score: கடைசி 3 பந்தில் மாறிய ஆட்டம்; த்ரில் வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!
IPL 2024 KKR vs SRH LIVE Score : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் தொடருக்கு முதற்கட்ட லீக் போட்டிகள் அட்டவணை வெளியிடப்பட்டது.அதன்படி நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 23ஆம் தேதி இரண்டு லீக் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டது. அதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் நடைபெறுகின்றது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றது.
இந்த போட்டி 17வது சீசனில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால் வெற்றியைப் பெற இரு அணிகளும் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா அணி மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸை ரூபாய். 20.50 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் மோதிக்கொள்வதால் இந்த போட்டியின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதுவரை 25 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறை வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.
கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன்கள் என்றால் அவர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ரின்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் பெயர் கட்டாயம் இருக்கும். இவர்கள் ப்ளேயிங் லெவனிலும் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், சன்ரைசர்ஸ் அணிக்கு தென்னாப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட்டில் இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது.
இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம்.
KKR vs SRH LIVE Score: கடைசி 3 பந்தில் மாறிய ஆட்டம்; த்ரில் வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
KKR vs SRH LIVE Score: பவுண்டரிகளே இல்லை
கடைசி 27 பந்துகளாக ஹைதராபாத் அணி பவுண்டரி விளாசவில்லை.
KKR vs SRH LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது.
13 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. ஹைதராபாத் வெற்றிக்கு 98 ரன்கள் தேவைப்படுகின்றது.
KKR vs SRH LIVE Score: ராகுல் த்ருப்பாதி அவுட்
19 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் த்ரிப்பாதி தனது விக்கெட்டினை இழந்தார். 12.5 ஓவர்களில் 111 ரன்களில் ஹைதராபாத் அணி தனது 4வது விக்கெட்டினை இழந்துள்ளது.
KKR vs SRH LIVE Score: 101 ரன்கள் தேவை
ஹைதராபாத் அணி வெற்றி பெற 8 ஒவர்களில் 101 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகின்றது.