மேலும் அறிய

IPL Vs WPL Final 2024: அதிசயம், ஆனால் உண்மை - மகளிர் ஐபிஎல் பாணியிலேயே ஆடவர் ஐபிஎல் - சேம் டூ சேம் ஸ்க்ரிப்ட்..!

IPL Vs WPL Final 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் சூழலும், மகளிர் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியின் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL Vs WPL Final 2024: நடப்பாண்டு ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீகின்  இறுதிப்போட்டியில் உள்ள ஒற்றுமைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் 2024 - கொல்கத்தா சாம்பியன்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நிறைவுபெற்றது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்திய, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. அதில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தலைமயிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் தான் இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு ஐபில் மற்றும் மகளிர் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் - டபள்யூபிஎல் 2024 இறுதிப்போட்டியின் ஒற்றுமைகள்:

 இறுதிப்போட்டியின் கேப்டன்கள்:

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

இந்தியன் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இறுதிப்போட்டியில் டாஸ்:

டபள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதேபோன்று, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியிலும் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸும் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தார்.

113 ரன்களுக்கு ஆல்-அவுட்:

முதலில் பேட்டிங் செய்த டெல்லி மகளிர் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதேபோன்று, முதலில் பேட்டிங் செய்த  ஐதராபாத் அணியும், 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி:

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 114 ரன்கள் என்ற இலக்கை, பெங்களூரு அணி எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோன்று, இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 114 ரன்கள் என்ற இலக்கை, கொல்கத்தா அணி எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் சூழலும், மகளிர் பிரீமியர் லீகின்  இறுதிப்போட்டியின் சூழலும், பல்வேறு விதங்களில் ஒத்துப்போவதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதென்ன சேம் டூ சேம் ஒரே ஸ்க்ரிப்டா இருக்கே? எனவும் பிசிசிஐ-யை டேக் செய்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget