(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024 Rishabh Pant: விபத்தில் இருந்து மீண்டு வந்து முதல் அரைசதம்; சென்னைக்கு எதிராக ரிஷப் பண்ட் சம்பவம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அரைசதம் விளாசி அசத்தினார்.
மீண்டு வந்த ரிஷப் பண்ட்:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்த வகையில் இந்த சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் 13 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அதன்பின்னர் பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறினார். ஆனால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் முக்கியமான போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. இச்சூழலில் தான் மெல்ல மெல்ல பல பயிற்களை பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை சில நேரங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதனை பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் தங்களது ஆட்டத்தை பார்க்க வேண்டும் விரைவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புங்கள் என்றும் ரிஷப் பண்டிற்காக பிரார்த்தனைகளும் மேற்கொண்டனனர்.
𝗔𝗨𝗗𝗔𝗖𝗜𝗢𝗨𝗦 𝗮𝗻𝗱 𝗵𝗼𝘄 🤯
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
Just our way of describing a Champion Knock ❤️ #YehHaiNayiDilli #IPL2024 #DCvCSK pic.twitter.com/Ilm8MR3vCQ
அசத்தல் அரைசதம்:
இந்நிலையில் தான் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்தார் ரிஷப் பண்ட். அதாவது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கினார். ஆனால் அந்த போட்டியில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.அதேபோல், கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகள் களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இது ரசிகர்களை ஏமாற்றம் அடையைச் செய்தது.
ONE-HANDED SIX BY RISHABH PANT 🔥
— Johns. (@CricCrazyJohns) March 31, 2024
- He is truly back...!!!!pic.twitter.com/fcYf8m9J12
இச்சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் விளாசி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அந்தவகையில், 32 பந்துகள் களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகளை விளாசினார். அதேபோல் 3 சிக்ஸர்க்ளையும் பறக்க விட்டர். இவ்வாறாக மொத்தம் 52 ரன்களை குவித்தார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.