மேலும் அறிய

IPL 2024 CSK VS RR: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் சென்னை.. பிளே ஆப்க்கு செல்லும் ராஜஸ்தான்.. யாருக்கு இன்று வெற்றி?

IPL 2024 CSK VS RR: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 61வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது செய் அல்லது செத்துமடி போட்டியாகும். ஒருவேளை  இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றால் பிளே ஆஃப் கனவு முற்றிலும் சிதைந்துவிடும். சென்னை அணி தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இதுவரை 12 புள்ளிகளுடன் இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

இத்தகைய சூழ்நிலையில், பிளே ஆப்களை அடைய, 16 புள்ளிகளை பெற வேண்டும். இதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி பிளேஆஃப்களை அடைய மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

அதேபோல், சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி இப்போது ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஒருவெற்றியுடன் இரண்டு புள்ளிகள் தேவையாக உள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்: 

சென்னை சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ஸ்டேடியம் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புண்டு. இரண்டாவது இன்னிங்ஸின்போது பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஐபிஎல் 2024ல் இந்த ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 183 ரன்க ஆகும்.

இதனால்தான் இங்குள்ள ஆடுகளத்தில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிகிறது. சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. கடைசி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. 

கடைசி 5 போட்டிகளில்..

2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2022 - ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2021 - ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, டேரில் மிட்செல், ரிச்சர்ட் க்ளீசன், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ரோவ்மேன் பவல், சந்தீப் சர்மா, அவேஷ் கான், டொனோவன் ஃபெரீரா, ரியான் பராக், யுஸ்வேந்திர சாஹல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget