Virat Kohli Record: கோலி தான் முதல் இந்தியர்! இரண்டு அணிகளுக்கு எதிராக கோலி படைத்த அரிய வரலாறு!
Virat Kohli: ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் சீசன் 17- இன்று (மார்ச் 22) தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கான்கின்றன.
முதல் போட்டி:
அதன்படி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டூ பிளிசிஸ் களம் இறங்கினார்கள்.
1000 ரன்களை கடந்த விராட் கோலி:
இதில், 23 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் விளாசி 35 ரன்கள் விளாசினார். அதேபோல் 20 பந்துகள் களத்தில் நின்ற 21 ரன்கள் எடுத்தார். அந்த வகையில் இன்றைய போட்டியில் விராட் கோலி ஒரு முக்கியமான சாதனையை படைத்தார். அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
Virat Kohli becomes the 1st Indian to complete 1,000 T20 runs against multiple teams. pic.twitter.com/e0bvPKCbDX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 22, 2024
அந்தவகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 போட்டிகள் விளையாடி இருக்கிறார் கோலி. இதில், 28 சிக்ஸர்கள் மற்றும் 95 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 1030 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 31 போட்டிகள் விளையாடியுள்ள கோலி 38 சிக்ஸர்கள் மற்றும் 73 பவுண்டரிகள் விளாசி மொத்தம் 1006 ரன்கள் எடுத்திருக்கிறார். இவ்வாறாக ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் விராட் கோலி.